Don't Miss!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- News உலகத்திலேயே நடக்காதது.. மன்னிக்க முடியாதது- மதிமுக கணேசமூர்த்தி மரணம் படுகொலையே..தமிழிசை படு ஆவேசம்!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சட்விக் ரொம்ப ஸ்பெஷல்.. உண்மையானவர்.. உடைந்து போன கேப்டன் அமெரிக்கா.. கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்
சென்னை: பிளாக் பாந்தர் நடிகர் சட்விக் போஸ்மேன் கேன்சர் பாதிப்பு காரணமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ந்து போன பிரபலங்கள் அவரது ஆன்மா சாந்தியடைய கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ் உருக்கமான ஒரு போஸ்ட்டையும் பதிவிட்டுள்ளார்.
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல பிரபலங்களும், பிளாக் பாந்தர் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடைந்து போனேன்
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உள்ளிட்ட மூன்று படங்களில் சட்விக் போஸ்மேன் உடன் இணைந்து நடித்த கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ், ரொம்பவே உடைந்து போய்ட்டேன். சட்விக் ரொம்பவே ஸ்பெஷல், உண்மையானவர், பிளாக் பாந்தரை போல மேலும் பல சூப்பரான படங்களை கொடுக்க வேண்டியவர், நம்மை விட்டு பிரிந்து விட்டார். ராஜாவே ஓய்வெடுங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கேன்சருக்கு இன்னொரு நடிகர் பலி
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர், சிறந்த நடிகர் இர்ஃபான் கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உள்ளிட்டோர் கேன்சர் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு உயிரிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இந்நிலையில், மற்றொரு இளம் நடிகரான சட்விக் போஸ்மேன் மரணத்திற்கு கோலிவுட் ஹீரோ சாந்தனு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இவ்ளோ சீக்கிரம் போய்ட்டீங்களே
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் சட்விக் போஸ்மேனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கு இந்த செய்தியை கேட்டு என பதிவிட்ட நிவின் பாலி, இவ்ளோ சீக்கிரம் போய்ட்டீங்களே என உருகியுள்ளார்.
ஓ நோ
நடிகர் கெளதம் கார்த்திக், "ஓ நோ.. ரொம்ப சீக்கிரம் எங்களை விட்டு பிரிந்து விட்டீர்களே" என மறைந்த பிளாக் பாந்தர் நடிகர் சட்விக் போஸ்மேனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளார். மேலும், அவரது புகைப்படங்களை பகிர்ந்து ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டுள்ளார்.
கேன்சருடனே
கேன்சர் பாதிப்பு இருந்த நிலையிலேயே பிளாக் பாந்தர் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார் சட்விக் போஸ்மேன். மாட் ஜாக்காப்ஸ் பதிவிட்ட ட்வீட்டை பகிர்ந்து நடிகையும் சூப்பர் மாடலுமான கிம் கர்தாஷியன் ஹார்ட் பிரேக்கிங் என பதிவிட்டுள்ளார்.
ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகள்
"RIP King", #BlackPanther, #Wakanda என ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு உலகளவில் உள்ள ஹாலிவுட் ரசிகர்கள் பிளாக் பாந்தர் நடிகர் சட்விக் போஸ்மேன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சட்விக் நடித்த திரைப்பட காட்சிகளையும் பகிர்ந்து வருகின்றனர். ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.