இன்னும் நம்ப முடியவில்லை... இதயம் நொறுங்கி விட்டது.. ஆர்என்ஆர் மனோகர் மரணம்.. பிரபலங்கள் உருக்கம்!

சென்னை: நடிகரும் இயக்குநருமான ஆர் என் ஆர் மனோகர் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

மறைந்த R.N.R. Manohar உடலுக்கு முதல்வர் Stalin இறுதி அஞ்சலி

தமிழ் சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் வலம் வந்தவர் ஆர் என் ஆர் மனோகர். இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இயக்குநர் ஆர் என் ஆர் மனோகர்

இயக்குநர் ஆர் என் ஆர் மனோகர்

2009-ம் ஆண்டு நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஆர் என் ஆர் மனோகர். இரண்டாவது படமாக வேலூர் மாவட்டம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவல் விஜயகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

இந்நிலையில் 61வயதான ஆர்என்ஆர் மனோகர் நேற்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

டைப் செய்ய முடியவில்லை

டைப் செய்ய முடியவில்லை

அந்த வகையில் ஆர்என்ஆர் மனோகர் இயக்கத்தில் வெளியான மாசிலாமணி படத்தில் ஹீரோவாக நடித்த நகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, "இதை டைப் செய்ய முடியவில்லை.. நான் மிகவும் மனம் உடைந்துவிட்டேன்... இன்னும் நம்ப முடியாமல் இருக்கிறேன்! தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் நல்ல வைப்ரேஷனையும் பாஸிட்டிவிட்டியையும் மட்டுமே பரப்பும் அத்தகைய உணர்ச்சிமிக்க மனிதர்.

மிஸ் பண்ணப்படுவீர்கள்

மிஸ் பண்ணப்படுவீர்கள்

எனது மறக்கமுடியாத திரைப்படங்களில் ஒன்றை எனக்குக் கொடுத்தவர் #மாசிலாமணி இப்போது இல்லை. மிகவும் திறமையான இயக்குனர், அன்பான தந்தையும், அன்பான கணவரும் விரைவில் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அமைதியில் ஓய்வெடுங்கள் மனோகர் சார், என் நினைவில் நீங்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். நீங்கள் உண்மையிலேயே மிஸ் பண்ணப்படுவீர்கள்." என பதிவிட்டுள்ளார்.

அதிர்ச்சியோடு அமர்ந்திருக்கிறேன்

அதிர்ச்சியோடு அமர்ந்திருக்கிறேன்

இதேபோல் நடிகை சுனைனா பதிவிட்டுள்ள டிவிட்டில், நான் நம்பிக்கையின்றியும் அதிர்ச்சியோடும் இங்கே அமர்ந்திருக்கிறேன். மனோகர் சார் இப்போது இல்லை என்பதை அறிந்து நான் எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. மனோகரின் குடும்பத்தார் எனது இரங்கலை ஏற்கவும். இந்த கடினமான நேரத்தில் கடவுள் உங்களுக்கு உதவட்டும். நான் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அன்பான நபர்

அன்பான நபர்

இதேபோல் மாசிலாமணி படத்தின் இசையமைப்பாளரான டி இமானும் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, ரிப் ஆர்என்ஆர் மனோகர் சார்.
அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சன் பிக்சர்ஸ் புரொடக்‌ஷனின் கீழ் நகுல் மற்றும் சுனைனா நடிப்பில் அவர் இயக்கிய "மாசிலாமணி" திரைப்படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் கிடைத்தது. திறமையான இயக்குனர் மற்றும் அன்பான நபர்.. என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X