தனிமை ஓர் உயிர்கொல்லி.. விஜய் ரசிகரின் மரணத்தால் நொறுங்கிப் போன பிரபலங்கள்!

சென்னை: நடிகர் விஜயின் ரசிகரான பாலா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திரைத்துறை பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜயின் ரசிகரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாலா என்பவர் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக கடந்த 11ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் தலைவனின் படத்தையும் பார்க்காமல் போகிறேன் தலைவனையும் பார்க்காமல் போகிறேன் என பதிவிட்டிருந்தார்.

Recommended Video

Adithya Tv Lokesh சிகிச்சைக்கு பணம் தேவை Hospital Bill கட்ட வேண்டும்

இந்நிலையில் பாலாவின் மரணத்திற்கு பிறகு அவரின் இந்த பதிவு பெரும் வைரலாகி வருகிறது. விஜயின் ரசிகர்கள் #RIPBala என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

இதனிடையே நடிகர் விஜய் மரணமடைந்த பாலாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாலாவின் மரணம் பேரதிர்ச்சியாக இருப்பதாக திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனிமை ஓர் உயிர்கொல்லி

தனிமை ஓர் உயிர்கொல்லி

ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
தனிமை ஓர் உயிர்கொல்லி. வாழ்வின் எந்த நிலையிலும் மனசு விட்டு பேச முகுமுள்ள, உயிருள்ள ஒருவரையாவது சம்பாதியுங்கள். தோல்வி மட்டுமல்ல வெற்றியும் ஓர் வெற்றிடம் தான் என தெரிவித்துள்ளார்.

நடிகை ஷ்ரேயா

நடிகை ஷ்ரேயா

நடிகை ஷ்ரேயா சரன் பதிவிட்டுள்ள டிவிட்டில் அய்யோ கடவுளே.. விஜய் சாரின் ரசிகர் இறந்துவிட்டார் என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது.. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் பதிவிட்டுள்ள டிவிட்டில் நீங்கள் யார் என்று தெரியாது ஆனால் ரொம்ப மிஸ் பண்றோம் பிரதர். விஜய் அண்ணாவின் ரசிகர்கள் அனைவரும் நானும் அவருக்காக பிரார்த்தனை செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

இதேபோல் நடிகர் ஹரீஷ் கல்யாண் பதிவிட்டுள்ள டிவிட்டில், பாலாவின் திடீர் மரணத்தை கேட்டு மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்! நண்பர்களே, நீங்கள் மனச்சோர்வடைந்த எவரையும் சந்தித்தால், அவர்களுக்கு உதவுங்கள், உங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதில் வெட்கமில்லை. தற்கொலை என்பது தீர்வு அல்ல என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X