உங்கள் உயிர் போனாலும் உயிர்ப்புடன் இருக்கும் உங்கள் ஓவியங்கள்.. இளையராஜா மரணம்.. பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: பிரபல ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. பிரபல ஓவியரான இவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

அதே படத்தில் பார்த்திபனின் சிறுவயது கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் இளையராஜா. கொரோனா தொற்று காரணமாக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார் இளையராஜா.

இளையராஜா மரணம்

இளையராஜா மரணம்

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்தார் ஓவியர் இளையராஜா. அவருக்கு வயது 43. ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உதவி இயக்குநர்

உதவி இயக்குநர்


நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு நிகழ்வில் என்னைச் சந்திக்க ஓவியர் இளையராஜா 10 நிமிடங்களில் Portrait வரைந்து கொடுத்தார்.'இவன்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததோடு, 'நாளைய இயக்குநர்கள்'என்று பெயர் போட்டு இளையராஜாவை உற்சாகப்படுத்த, பின் உலக புகழ் பெற்று இன்று இவ்வுலகைப் பிரிந்து/வருத்தம் என பதிவிட்டுள்ளார்.

ஆறுதல் எனக்கே தேவை

ஆறுதல் எனக்கே தேவை

நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ள மற்றொரு டிவிட்டில், நண்பன்/அன்புத் தம்பி ஓவியர் இளையராஜா மறைவு,

மன அதிர்ச்சியையும் தாளா துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆறுதல் எனக்கே தேவையெனும் போது அவர் குடும்பத்தாருக்கு எப்படி? என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அற்புதமான கலைஞர்

அற்புதமான கலைஞர்

பாடலாசிரியர் விவேக், ஓவியர் இளையராஜா வரைந்த ஓவியம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். மேலும் இது புகைப்படம் என்று நினைத்தவர்கள் யாரெல்லாம் ?

இளையராஜா (ஓவியர்) என்ற அற்புதமான கலைஞர் வரைந்த ஓவியம் இது. இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது மிகவும் வருத்தமளிக்கிறது. கிராமியப் பெண்களையும் நம் வாழ்க்கை முறையையும் அவர் பதிவு செய்த விதம் பேரழகு என பதிவிட்டுள்ளார்.

உச்சம் தொட்ட ஓவியர்

உச்சம் தொட்ட ஓவியர்

இதேபோல் இயக்குநர் நவீன் முகமதலி பதிவிட்டுள்ள டிவிட்டில், எங்கள் குடும்ப நண்பர், குடும்பத்தில் ஒருவர், ஓவியர் இளையராஜா நேற்று இரவு கொரோனா சிகிச்சை பலனளிக்காமல் நம்மை பிரிந்தார். #OilPainting என்றால் இளையராஜாதான். அவருக்கு நிகர் எவருமில்லை. அப்படி ஒரு உச்சம் தொட்ட ஓவியர். இது தமிழ்நாட்டிற்கும் ஓவியத்துறைக்கும் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.

உயிர்ப்புடன் இருக்கும் ஓவியங்கள்

உயிர்ப்புடன் இருக்கும் ஓவியங்கள்

இதேபோல் நவீன் முகமதலி பதிவிட்டுள்ள மற்றொரு டிவிட்டில், உங்கள் உயிர் போனாலும், உயிர்ப்புடன் இருக்கும் உங்கள் ஓவியங்கள் இருக்கும்வரை நீங்களும் நீங்காமல் இருப்பீர்கள் இளையராஜா! என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சீக்கிரம் சென்றுவிட்டார்

சீக்கிரம் சென்றுவிட்டார்

இதேபோல் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ள டிவிட்டில் எனக்கு பிடித்த ஓவியர்களில் ஒருவர் இல்லை என்று நம்ப முடியவில்லை. அவரது படைப்புகளில் ஒன்றைப் பெற எப்போதும் விரும்பினேன். சீக்கிரம் சென்றுவிட்டார். RIP இளையராஜா என குறிப்பிட்டுள்ளார.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X