பேரதிர்ச்சி.. காலமே துயரத்தையும் கண்ணீரையும் துடைத்துவிடு.. ஓபிஎஸ் மனைவி மரணம்.. பிரபலங்கள் இரங்கல்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

திடீர் மாரடைப்பு
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தார் விஜயலட்சுமி. இதனை தொடர்ந்து இன்று காலை 6.45 மணிக்கு விஜயலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

சிகிச்சை பலனின்றி மரணம்
அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. ஓ பன்னீர்செல்வம் மனைவியின் மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தலைவர்கள் அஞ்சலி
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

சினிமா பிரபலங்கள் இரங்கல்
மேலும் மனைவியை இழந்து வாடும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் ஆறுதல் கூறினர். ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

துயரத்தையும் கண்ணீரையும் தொட்டுத் துடைத்துவிடு
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் விஜயலட்சுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது,
அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார்
திருமதி விஜயலட்சுமி அம்மையார்
மறைந்த செய்தி
வருந்த வைத்தது.
அவருக்கும், குடும்பத்தார்க்கும்
உறவுகள் அனைவர்க்கும்
என் ஆழ்ந்த இரங்கல்.
காலமே!
அவர்தம் துயரத்தையும்
கண்ணீரையும்
தொட்டுத் துடைத்துவிடு.. என குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் விஜயலட்சுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது,
அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார்
திருமதி விஜயலட்சுமி அம்மையார்
மறைந்த செய்தி
வருந்த வைத்தது.
அவருக்கும், குடும்பத்தார்க்கும்
உறவுகள் அனைவர்க்கும்
என் ஆழ்ந்த இரங்கல்.
காலமே!
அவர்தம் துயரத்தையும்
கண்ணீரையும்
தொட்டுத் துடைத்துவிடு.. என குறிப்பிட்டுள்ளார்.

பேரதிர்ச்சியாக இருக்கிறது
இதேபோல் இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில், முன்னாள் முதல்வரும்,
அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை ஒருங்கிணைப்பாளரும், மதிப்பிற்குரிய திரு.ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி திருமதி விஜயலட்சுமி அவர்களின் மறைவு செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது.. என குறிப்பிட்டுள்ளார்.

வருத்தமடைந்தேன்..
இதேபோல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசனும் விஜயலட்சுமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து துயரில் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. என குறிப்பிட்டுள்ளார்.

ஆறுதல் கூறினோம்
இதேபோல் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் துணைவியார் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்ததையடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் மருத்துவமனைக்கு சென்று அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் குடும்பத்தார்- அதிமுகவினருக்கு ஆறுதல் கூறினோம். ஆழ்ந்த இரங்கல்.. என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











