பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் திடீர் மரணம்.. திரை பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை பூர்விகமாக கொண்டவர் பிறைசூடன்.

1985-ல் வெளியான 'சிறை' படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த 'ராசாத்தி ரோசாப்பூ' என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

நூறு வருஷம்..

நூறு வருஷம்..

பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய 'நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்', செம்பருத்தி திரைப்படத்தில் 'நடந்தால் இரண்டடி' உள்ளிட்ட பாடல்கள் பெரும் ஹிட்டான பாடல்கள். இந்த நிலையில் நேற்று மாலை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பிறைசூடன் காலமானார்.

அதிர்ச்சியும் சோகமும்

அதிர்ச்சியும் சோகமும்

திடீர் மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது மறைவுக்கு திரையுகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆழ்ந்த வருத்தங்கள்

ஆழ்ந்த வருத்தங்கள்

இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, கவிஞர் பிறைசூடன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கல்களையும் பதிவு செய்கிறேன்.. உங்களின் ஆத்மா அமைதி கொள்ளட்டும் அய்யா.. என குறிப்பிட்டுள்ளார்.

அழகிய பெயருடையான் போயுற்றான்

அழகிய பெயருடையான் போயுற்றான்

கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறைசூடன் என்ற
அழகிய பெயருடையான்
போயுற்றான்
நல்ல மனிதனாய்
நல்ல கலைஞனாய்
அறியப்பட்டோன்
ஆவிதுறந்தான்
சிந்தனையாளன்
செயற்பாட்டாளன்
சக கவிஞர்களைக்
கொண்டாடும் கொள்கையாளன்
சென்றுவிட்டான்
தமிழோடு வாழ்வான்;
அகமே அமைதியுறுக! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிறைசூடனுக்கு அஞ்சலி

பிறைசூடனுக்கு அஞ்சலி

பிறைசூடன் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய பாடல் வரிகளை பதிவு செய்தும் மறைந்த பாடலாசிரியர் பிறைசூடனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விளக்கம் அழகாக இருக்கும்

விளக்கம் அழகாக இருக்கும்

இந்த ரசிகர், பிறைசூடன் பொதிகை தொலைக்காட்சியில் பழைய பாடல்களுக்கு மிக அழகாக அர்த்தம் கூறும் நிகழ்ச்சி. அந்த பாடல்களை நாம் கேட்ட போது அதன் அர்த்தம் இதுதான என வியக்கும் அளவிற்கு இவரின் விளக்கம் அழகாக இருக்கும் என அவருடைய நினைவுகளை பகிர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X