அரியணை ஏறும் ஸ்டாலினுக்கு... திரைப்பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதற்காக திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Celebrities Congratulates MK Stalin

திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி உள்ளது.

மொத்தமுள்ள234 தொகுதிகளில்திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்அதிக இடங்களில்முன்னிலைபெற்றுள்ளன. பல தொகுதிகளில்இரண்டாம்இடம் பிடித்துள்ளகட்சிகளுக்கும்திமுகவுக்குஇடையேயானவாக்கு வித்தியாசம்அதிகம் உள்ளதால் தங்களது வெற்றி உறுதியாகிவிட்டதாககூறி தமிழகம் முழுவதும்திமுகவினர்கொண்டாடிவருகின்றனர்.

தமிழக தேர்தல் முடிவுகள்அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்படாதபோதிலும்திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

நகைச்சுவை நடிகர் சதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகத்தான வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திரு. ஸ்டாலின் அய்யா அவர்களுக்கும், திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இதேபோல விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும், மகத்தான வெற்றி வெற்ற சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், சிறப்பாக ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X