இயற்கை அன்னை ஒரு போதும் கைவிடாது.. தழுவிக்கொள்ளும்.. சென்றுவா செந்நிறத் தோழனே.. பிரபலங்கள் உருக்கம்!
சென்னை: இயக்குநர் எஸ்பி ஜனநாதன் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்பி ஜனநாதன். இதில் அவரது முதல் படமான இயற்கை படம் தேசிய விருதை வென்றது.
ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான பூலோகம் படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார் எஸ்பி ஜனநாதன். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பிரபலங்கள் இரங்கல்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஷாக்கிங்..
இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், அதிர்ச்சி, ரிப் எஸ்பி ஜனநாதன்.. அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
ஷாந்தனு இரங்கல்
இதேபோல் நடிகர் ஷாந்தனு பாக்யராஜூம் எஸ்பி ஜனநாதனின் மறைவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் ரெஸ்ட் இன் பீஸ் எஸ்பி ஜனநாதன் சார் என பதிவிட்டுள்ளார்.
நினைவில் இருக்கும்
இதேபோல் ஒளிபதிவாளர் பிசி ஸ்ரீராம் பதிவிட்டுள்ள டிவிட்டில் சமூகம் மீதான உங்கள் நம்பிக்கையை பிரதிபலித்த உங்கள் திரைப்படங்கள் நினைவில் இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
உங்கள் நினைவுகள்
இதேபோல் நடிகர் ஜெயம் ரவி பதிவிட்டுள்ள டிவிட்டில், ரிப் ஜனா சார். உங்கள் நினைவுகளை எங்களிடம் இருந்து யாரும் எடுத்து செல்ல முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
தழுவிக்கொள்ளும்..
இதேபோல் இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில் நம்பிக்கையும், பிரார்த்தனைகளும், கை நழுவிச் சென்றாலும்
இயற்கை அன்னை ஒரு போதும் கைவிடாது.. உன்னைத் தழுவிக்
கொள்ளும்.. சென்று வா.. செந்நிறத் தோழனே என பதிவிட்டுள்ளார்.
மிஸ் பண்ணுவோம்
இசையமைப்பாளர் டி இமான் பதிவிட்டுள்ள டிவிட்டில், லாபம் பட இயக்குநர் எஸ்பி ஜனநாதன் மறைந்து விட்டார். அவருடைய ரோல் மாடலான சமூக புரட்சியாளரான கார்ல் மார்க்ஸின் நினைவு நாளில் அவர் மரணமடைந்துள்ளார். நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம் சார் என பதிவிட்டுள்ளார்.
என்னால் மறக்க முடியாது
இயக்குநர் விருமாண்டி பதிவிட்டுள்ள டிவிட்டில் அண்ணா எப்போதும் அன்பை மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தே மனித தெய்வமே தெய்வமாகிவிட்டாய் அண்ணா இயக்குநர்கள் சங்கத்தில் ஆரம்பித்த அண்ணன் ,தம்பி என்ற பாசம் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தது படத்தை பார்த்துவிட்டு ஆனந்தமாக பேசிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











