என்னாது.. ஆளாளுக்கு "எஞ்சாயா".. ஏஞ்சாமி. நாங்க என்னாவது.. அனல் கிளப்பும் கூ கூ!

சென்னை : தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் தான் இப்போது அனைவரும் முணுமுணுக்கும் ஒரு டிரெண்டிங் பாடல்.

பலரையும் ரசிக்க வைத்து அனைவரையும் குக்கூ.. குக்கூ என கூவ வைத்து வேறலெவலில் வைரலாகி வருகிறது. எங்கு பார்த்தாலும் தீயின் தித்திக்கும் குரல்தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த பாடலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இப்பாடலை வெகுவாக கொண்டாடி வரும் நிலையில், பல திரைப்பிரபலங்களும் இப்பாடலுக்கு ஆடி பாடி இணையத்தில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

டப்ஸ் மாஷ்

தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நஸ்ரியா, தமிழ், மலையாளத்தில் மிகவும் பிபரலமான இவர், தீ யில் குரலில் தீயாய் பரவி வரும் எஞ்சாய் என்சாமி பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

குவிலாக கூவும்

கன்னக்குழி அழகு ஸ்ருட்டி டாங்கே டார்லிங், மேகா போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் நடித்தது ஒரு சில படங்கள் என்றாலும், இவரது தனித்துவமான சிரிப்பழகால் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். தற்போது இவர், இணையத்தில் கலக்கி வரும் குக்கூ... குக்கூ பாடலுக்கு அழகான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

குட்டி ஆட்டம்

தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, சந்தோஷ் நாரயணனின் இசையில் தீ மற்றும் அறிவின் குரலில் பட்டி தொட்டி எங்கும் கேட்டுவரும் பாடலான எஞ்சாய் என்சாமிக்கு ஒரு குட்டி ஆட்டம் போட்டுள்ளார்.

அசத்தலாக

விஜய் டிவியில் பல வருடங்களாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர், சின்னத்திரையில் மிகவும் முக்கியமானவர் விஜே.ரம்யா. நடிகையாக மாறி உள்ள இவர், விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனைவரையும் ரிப்பீட் மோடில் கேட்க வைத்து வரும் டிரெண்டிங் பாடலான குக்கூ ஆல்பம் பாடலுக்கு புடவையில் அசத்தலாக ஆட்டம் போட்டுள்ளார்.

க்யூட் ஆட்டம்

சன் தொலைக்காட்சியில் தென்றல் சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். அதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஆபிஸ் மற்றும் ஜீ தமிழி தொலைக்காட்சியில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் சீரியலில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது எஞ்சாய் என்சாமி பாடலுக்கு, கருப்பு வெள்ளையில் வீடியோவில் புடவை அணிந்து அழகாக ஆட்டம் போட்டுள்ளார்.

76 மில்லியன் பார்வையாளர்கள்

பாடலாசிரியர் மற்றும் ராப் சிங்கருமான அறிவு இந்த ஆல்பம் பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். மிகப்பெரிய அளவில் ஹிட்டான இந்த பாடலை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டியதோடு அதை வீடியோவாக பதிவிட்டு மேலும் ஹிட்டாக்கி உள்ளார். இந்த ஆல்பம் சாங் இதுவரை 76 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X