சமுத்திரகனி முதல் தன்ஷிகா வரை.. பிரபலங்கள் வாழ்த்தும் ஒன் இந்தியா தமிழ் சிறப்பு தீபாவளி வீடியோ!

சென்னை: 2020ம் ஆண்டை கோலாகலமாக கொண்டாடி வரவேற்ற உலக மக்கள், கொரோனா எனும் கொடிய நரகாசூரன் கையில் சிக்கி சின்னாபின்னமானது.

2020ம் ஆண்டையே சபிக்கப்பட்ட ஆண்டாக மக்கள் பார்த்து பயந்தனர். கிட்டத்தட்ட 4 மாதங்கள் மிகப்பெரிய லாக்டவுனில் நாடு முழுவதும் உள்ள பல கோடி மக்கள் வெளியே செல்ல முடியாமல், எந்தவொரு பண்டிகையும் கொண்டாட முடியாமல், திருமணத்திற்கு கூட சொந்தங்களையும் நண்பர்களையும் அழைக்க முடியாமல் கொண்டாடினார்கள்.

ஆனால், தொடக்கம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்ற ஒன்றும் இருக்கத்தானே செய்யும்.

Celebrities Diwali wishes for One India Tamil viewers!

இந்த தீபாவளி பண்டிகை முதல் மக்கள் கொரோனா பயமின்றி கொண்டாட்டத்தை ஆரம்பிக்க மெல்ல தொடங்கி உள்ளனர்.

இந்த உலகை விட்டு இந்த தீபாவளியுடன் கொரோனா எனும் கோர அரக்கன் அழிந்து ஒழிய வேண்டும் என்றும் ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்து இந்த விழாவை கொண்டாட தயார் ஆகி விட்டனர்.

ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் நேயர்களுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சமுத்திரகனி, நடிகை இனியா, நடிகை தன்ஷிகா, சைலன்ஸ் பட இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் மற்றும் சின்னத்திரை நடிகைகளான நீபா மற்றும் ஸ்ரீதுர்கா ஆகியோரும் தங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை நம்முடனும், நமது வாசகர்களுடனும் பகிர்ந்துள்ளனர். மிஸ் பண்ணாம பாருங்க! அனைத்து வாசகர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X