களைகட்டும் தீபாவளி... புத்தாடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : கடந்த ஒரு மாதமாகவே தீபாவளி பற்றிய பல்வேறு சுவாரஷ்யமான நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்து வருவதை அடுத்து இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீபாவளி மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Recommended Video

Rajinikanth, Keerthy Suresh, Sneha & Other Celebrities Diwali celebration

தீபாவளிக்கு பட்டாசு இனிப்பு புத்தாடை எவ்வளவு முக்கியமோ அதேபோல புதிய திரைப்படங்களும் திரைப் பிரபலங்களின் வாழ்த்துக்களும் ரசிகர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அந்த வகையில் இன்று பிரபலங்கள் பலரும் தங்களது தீபாவளி வாழ்த்துக்களை புத்தாடை அணிந்து கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

பட்டாசுகளை வெடித்து

பட்டாசுகளை வெடித்து

நம்பர் 14 ஆம் தேதியான இன்று இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சாதி மதம் பேதம் பார்க்காமல் அனைவரும் சமத்துவத்தோடு பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பகிர்ந்துகொண்டும் புத்தாடைகளை அணிந்தும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம்

கடந்த ஆண்டு இதைவிட கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி, இந்த ஆண்டு கொரானா தாக்கத்தின் மத்தியிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜவகர்லால் நேரு பிறந்த தினமான இன்று நம்பர் 14 குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓடிடி தளத்தில்

ஓடிடி தளத்தில்

ஒரே நாளில் தீபாவளி மற்றும் குழந்தைகள் தினம் என இரண்டும் ஒருசேர வர மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப ஆவலுடன் இருக்கின்ற நிலையில், தீபாவளிக்கு வழக்கம்போல புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்திருந்த நிலையில் கொரானா அச்சம் காரணமாக இந்த வருடம் ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

ஈஸ்வரன் டீசர்

ஈஸ்வரன் டீசர்

தீபாவளி சிறப்பு திரைப்படங்களாக சூரரைப்போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர்களும் ரசிகர்களை மேலும் கொண்டாட வைத்துள்ளது. இவ்வாறு தீபாவளி அப்டேட்கள் ஒருபுறமிருக்க ரசிகர்களுக்கு பல்வேறு திரைப் பிரபலங்களும் தங்களது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

விளக்குகளால் அலங்கரித்து

விளக்குகளால் அலங்கரித்து

நடிகை கீர்த்தி சுரேஷ் புத்தாடை அணிந்து கொண்டு வீடு முழுவதும் அகல் விளக்குகளால் அலங்கரித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

டாக்டர் படக்குழு

டாக்டர் படக்குழு

சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தீபாவளியான இன்று காலை 11 மணிக்கு மற்றும் 3 மணிக்கு என இரண்டு அப்டேட்களை டாக்டர் படக்குழு வெளியிட உள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் வழக்கம்போல தங்களது பாணியில் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா தீபாவளி பரிசை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர்.

அணிகா சுரேந்தரன்

அணிகா சுரேந்தரன்

அஜித் நடித்த என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித்தின் குழந்தையாக நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்தரன் கருப்பு நிற உடையில் கையில் கம்பி மத்தாப்புக்களுடன் பட்டாசுகளின் வெளிச்சம் சூழ க்யூட்டான சிரிப்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை ரித்விகா

நடிகை ரித்விகா

நடிகை ரித்விகா அம்சமான பச்சை நிற புடவையில் பார்க்க லட்சணமாக நின்றுகொண்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறியவாறு சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நீலவண்ண புடவையில்

நீலவண்ண புடவையில்

நீலவண்ண நீளமான புடவையில் அழகாக சோபாவில் உட்கார்ந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகை பிரியாமணி.

தீபாவளி புத்தாடை

தீபாவளி புத்தாடை

தனது 50-வது திரைப்படமான மஹா திரைப்படத்தில் ஒரு புறம் பிஸியாக நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி, தீபாவளி புத்தாடையை அணிந்து கொண்டு அடக்க ஒடுக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

தீபாவளியில் மிக முக்கியமான ஒன்று தீப ஒளி, பார்க்கவே மங்களகரமாக பட்டு சேலை உடுத்திக் கொண்டு கையில் அகல்விளக்குக்களுடன், ஒளிச்சுடரில் மகாலட்சுமி போல நடிகை கஸ்தூரி சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலக குழந்தைகள் தினம்

உலக குழந்தைகள் தினம்

இவ்வாறு தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக ஒருபுறம் கொண்டாடி வர, பிரபலங்கள் தங்களது ரசிகர்களுக்காக புத்தாடை அணிந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்து வரும் நிலையில், இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X