பாத்திரம் கழுவும் கத்ரீனா.. டான்ஸ் ஆடும் திஷா.. கொரோனா லீவை என்ஜாய் பண்ணும் நடிகைகள்!

மும்பை: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் படப்பிடிப்புகள், புதிய படங்கள் ரிலீஸ், தியேட்டர்கள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து சினிமா துறையும் ஃபுல் ஷட் டவுன் ஆகி உள்ளது.

வீட்டில் இருக்கும் நடிகைகள், தங்களின் பொன்னான நேரத்தை எப்படி செலவு செய்கின்றனர், என்பதை சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றனர்.

ஹோம் ஜிம்

கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தங்களை காத்துக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியா முழுவதும் அனைத்து பிரபலங்களும் மேற்கொண்டு வருகின்றனர். நடிகைகள் ஜிம்முக்கு போகாமல், வீட்டில் இருந்த படியே உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல பிரபல நடிகைகளும், தங்கள் வீட்டையே ஹோம் ஜிம்மாக மாற்றி உள்ளனர்.

பாத்திரம் கழுவும் கத்ரீனா

.வீடியோ காலில் தனது நெருங்கிய நண்பர்களான அர்ஜுன் கபூர், வருண் தவான் உள்ளிட்டோருடன் அண்மையில் வீடியோ காலில் பேசி அரட்டை அடித்த நடிகை கத்ரீனா கைஃப், தற்போது, பாத்திரம் கழுவும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில், வீட்டு வேலைகளில் உதவியாய் இருப்பது சந்தோஷத்தை தருகிறது என்றும் கூறியுள்ளார்.

திஷா டான்ஸ்

கத்ரீனா கைஃப் இப்படி பொறுப்பாக வீட்டு வேலைகளை செய்து வரும் நிலையில், மலங் படத்தின் நாயகி திஷா படானி, டைகர் ஷெராஃப்பின் தங்கை கிருஷ்ணா ஜாக்கி ஷெராஃப்புடன் இணைந்து செம குத்து டான்ஸ் போட்டு வருகிறார். இடுப்பு தெரியும்படி, சட்டையை தூக்கிக் கட்டிக் கொண்டு, கூலர்ஸ், குட்டி டிரெஸ் அணிந்து இருவரும் குவாரண்டின் லைஃபை இன்னாமா என்ஜாய் பண்றாங்க பாருங்க..

தக்காளி பறிக்கும் நாகினி

நாகினி சீரியல் மூலம் இந்தியளவில் பிரபலமான பாலிவுட் நடிகை மெளனி ராய், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஷூட்டிங் ஏதுமின்றி வீட்டில் குடும்பத்தினருடன் ஜாலியாக தனது பொழுதை கழித்து வருகிறார். ஷூட்டிங் பிசியில் குடும்ப வாழ்க்கையை கவனிக்க முடியாமல் தவித்த பல நடிகர்களுக்கும், இந்த நேரம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தனது தோட்டத்தில் விளைந்து இருக்கும் குட்டித் தக்காளியை மெளனி ராய் பறிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தீபிகா ரொமான்ஸ்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே மற்றும் அவரது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் இருவரும், இந்த ஃப்ரீ டைமை ரொமான்ஸ் டைம்மாக ஆக்கப்பூர்வமாக மாற்றியுள்ளனர். ரன்வீர் சிங்கின் '83' படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X