2026ல் திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரபலங்கள்.. இதுதான் லிஸ்ட்.. இந்த வருடமும் செம கொண்டாட்டம்தான்!
சென்னை: 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை சமந்தா, சம்யுக்தா மேனன், சாக்ஷி அகர்வால், கிஷன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணம் செய்திருந்தார்கள். அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள். இந்நிலையில் 2026ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரபலங்களை இதில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் 2025ஆம் ஆண்டு முடிந்து 2026ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். இது ஒருபக்கம் இருக்க கடந்த ஆண்டை பொறுத்தவரை சமந்தா, கிஷன் தாஸ், சம்யுக்தா மேனன், தொகுப்பாளினி விஜே பிரியங்கா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களுக்கு திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. சூழல் இப்படி இருக்க 2026ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரபலங்களை பற்றியும் இதில் பார்க்கலாம்.
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா: இந்திய அளவில் ஃபேமஸான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் க்ரஷ் என்று கொண்டாடப்படும் அவருக்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. கடந்த வருடமே அவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரகசியமாக நிச்சயதார்த்தம் மட்டும் நடந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர்களுக்கு இந்த வருடம் பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
அல்லு சிரிஷ் - நயானிகா ரெட்டி: பான் இந்தியா நடிகராக வளந்திருக்கும் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ். இவரும் தெலுங்கில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவருக்கும், நயானிகா ரெட்டிக்கும் கடந்த வருடம் அக்டோபர் 31ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த வருடம் மார்ச் ஆறாம் தேதி அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நுபுர் சனோன் - ஸ்டெபின் பென்: பாலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சனோனின் தங்கைதான் நுபுர் சனோன். இவரும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவரும், பின்னணி பாடகர் ஸ்டெபின் பென்னும் நீண்ட காலமாக காதலித்துவந்தார்கள். இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் ஜனவரி 11ஆம் தேதி உதய்பூரில் நடக்கவிருக்கிறது. மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் ஜூலி - முகமது ஐக்ரீம்: ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஜூலி; முகமது ஐக்ரீம் என்பவரை காதலித்துவந்தார். கடந்த வருடம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த சூழலில்; இரண்டு பேருக்கும் ஜனவரி 16ஆம் தேதி திருமணம் நடக்கிறது. சென்னை பரங்கி மலையில் இருக்கும் செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் திருமணம் நடக்கும் என்றும்; அன்றைய தினம் ஏழு மணிக்கு வரவேற்பு நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











