லாக் டவுன் நேரம்.. இப்படியெல்லாம் யோகா செய்யும் நடிகைகள்.. ஒரு சின்ன ரவுண்டப்!

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Recommended Video

Suhasini hasan yoga challenge | Qurantine | Lock down life

நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், ஜிம்முக்கு போக முடியாத நடிகைகள், தங்கள் வீட்டிலேயே வித விதமாக யோகா செய்து அசத்துகின்றனர்.

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்கும் விதமாகவும் நடிகைகள் தாங்கள் செய்யும் யோகா புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

🦢

A post shared by Esha Gupta🌎 (@egupta) on

வில்லாக வளைந்து

பாலிவுட் நடிகை இஷா குப்தா, யோகா செய்வதில் தனித் திறமையே கொண்டு இருக்கிறார். வித்தியாச வித்தியாசமான யோகாக்களை சர்வ சாதாரணமாக செய்து அசத்துகிறார். இந்த லாக்டவுனில் வீட்டில் இருந்தே யோகா செய்பவர்கள், இஷா வில் போல வளைந்து செய்யும் யோகாக்களை பயிற்சி செய்தால், கொரோனா கிட்டவே நெருங்காது.

டாப்லெஸ் யோகா

பாலிவுட்டில் பிரபலமான டிவி நடிகை அபிகெயில் பாண்டே வெறி கொண்ட வொர்க்கவுட் ஃப்ரீக். அதிலும் நிர்வாணமாக யோகா செய்து பாலிவுட் ரசிகர்களை மிரள வைத்து வருகிறார். டாப்லெஸ் ஆக அபிகெயில் பாண்டே பதிவிட்டுள்ள யோகா புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரஸை விட தீவிரமாக பரவி வருகிறது.

கண்ணுக்கு குளிர்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஷூட்டிங் எல்லாம் ரத்து செய்யப்பட்டு நடிகர்கள், நடிகைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி செய்து வரும் நடிகைகள், டைட்டாகவும், குட்டை ஆடைகளை அணிந்துக் கொண்டும் வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் கண்களையும் குளிரவைத்து வருகின்றனர். ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படம் அதனை சிறப்பாக செய்துள்ளது.

கைகள் கீழே கால்கள் மேலே

முகமூடி, மொகஞ்சதாரோ, அலா வைகுந்தபுறமுலோ என இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வரும் பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டாகிராமில் கைகளை கீழே ஊன்றி, கால்களை மேலே தூக்கி சுவற்றில் முட்டுக் கொடுத்தபடி யோகா செய்யும் புகைப்படம் இணையத்தையே வாயை பிளக்க வைத்திருக்கிறது.

தலை கீழாக

சல்மான் கானுடன் கிக், அக்‌ஷய் குமாருடன் ஹவுஸ்ஃபுல், வருண் தவானுடன் ஜூத்வா 2 என பல பாலிவுட் படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ், தினமும் தலைகிழாக யோகா செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறாராம். லாக் டவுன் நேரத்தில் இன்வர்ஷன் யோகா செய்துள்ள வீடியோவை பதிவிட்டுள்ள ஜாக்குலின் இன்வர்ஷன் சேலஞ்சையும் விடுத்துள்ளார்.

வேற லெவல் வித்தை

அபிகெயின் பாண்டேவின் நெருங்கிய தோழியும் டிவி நடிகையுமான ஆஷ்கா கொராடியாவும் விதவிதமான யோகா வித்தைகள் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு, தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாயை பிளக்க வைத்து வருகிறார். நடிகர்களை விட நடிகைகளே பெரும்பாலும் யோகாக்களை செய்ய விரும்புவது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் எல்லாம் சிக்ஸ் பேக் வெறியர்கள் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X