அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன்.. கொண்டாடும் ஹாலிவுட் பிரபலங்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதை ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். ஜோ பிடன் 290 இடங்களை கைப்பற்றி அதிபர் தேர்தலில் வென்றுள்ளார்.
அவரை அடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவர்கள் இருவருக்கும் உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் அமெரிக்க அதிபர் தேர்தல் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமந்தா பீ
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதை ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க தொலைக்காட்சியில் ஃபுல் ஃபிரன்டல் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகை சமந்தா பீ, செலிபிரேஷன் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். மேலும் கனவுகள் நனவாகும்! இதை நாங்கள் 2016 இல் திரும்பப் பெற்றோம், ஆனால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. இறுதியாக உங்களுடன் கொண்டாட நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் எனபதிவிட்டுள்ளார்.
மிகப் பெரிய கருணை
அமெரிக்க பாடகியான லேடி காகாவும் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு, அமெரிக்க மக்களே, மனிதகுலம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய கருணை மற்றும் துணிச்சலான செயல்களில் ஒன்றை நீங்கள் உலகுக்குக் கொடுத்திருக்கிறீர்கள். எங்கள் புதிய அதிபர் மற்றும் வெள்ளை மாளிகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் துணை அதிபருக்கு அன்புகள் என பதிவிட்டுள்ளார்.
இரக்கமுள்ளவரின் கைகளில்
இதேபோல் பாடகி, நடிகை, டான்சர் என பல முகங்களை கொண்ட ஷகிராவும் ஜோ பிடனின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், உலகம் இப்போது இரக்கமுள்ள ஒருவரின் கைகளில் உள்ளது. இப்போது சுற்றுச்சூழலை சுத்தம் செய்வதற்கும், அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் நேரம் வந்துவிட்டது. நாம் அனைவரும் நம் பங்கை அளிக்க வேண்டும், ஆனால் அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது கொண்டாட என் குழந்தைகளுடன் ஒரு சிறிய நடனம்! என கூறி ஜோ பிடனின் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
கிளம்புங்க ட்ரம்ப்
இதேபோல் அமெரிக்க எழுத்தாளரும், மாடல், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்ட பத்மலக்ஷ்மி, டொனால்ட் ட்ரம்ப் ப்ளீஸ் போங்க என்று பேசி வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். மேலும் இதை சொல்வதற்காக 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் காத்திருந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
வேராக இருக்கிறேன்
இதேபோல் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பதிவிட்டுள்ள டிவிட்டில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகு நான் இதைச் சொல்கிறேன், ஏனென்றால் சிலர் இதை முன்பை விட அதிகமாக கேட்க வேண்டும்: நான் உங்களுக்காக வேரூன்றி இருக்கிறேன், ஏனென்றால் உங்கள் வெற்றி நாட்டின் வெற்றி என ட்ரம்பை வெறுப்பேற்றும் வகையில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











