வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்.. பிரபலங்கள் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

சென்னை : நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.

Recommended Video

வெளியானது Ponniyin Selvan Part 1 Teaser... கொண்டாடத்தில் ரசிகர்கள்

இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ள நிலையில் செப்டம்பர் 30ம் தேதி படம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் மிகவும் பிரம்மாண்டமான அளவில் வெளியாகியுள்ளது.

 பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் கைவண்ணத்தில் வெளியான பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள நிலையில், தற்போது முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஒரு படத்தை எடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. அந்த காலகட்டத்திற்கு ரசிகர்களை கொண்டு செல்லும் கட்டாயம் இயக்குநருக்கு உள்ளது.

பிரம்மாண்டங்களின் இயக்குநர்

பிரம்மாண்டங்களின் இயக்குநர்

இதுபோன்ற முயற்சிகளில் இயக்குநர் ராஜமௌலி சிறப்பாக செயல்பட்டு நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளார். இவரது பாகுபலி படங்களின் பிரம்மாண்டம் ரசிகர்களை வசீகரித்தது. தற்போது வரையில் இந்தப் படங்களை அடித்துக் கொள்ள படமே இல்லை என்னும் அளவில் இந்தப் படங்களின் பிரம்மாண்டம் பேசப்பட்டு வருகிறது.

மணிரத்னத்தின் முயற்சி

மணிரத்னத்தின் முயற்சி

அந்த வகையில் தற்போது இந்த முயற்சியில் தற்போது மணிரத்னம் இறங்கியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் காலத்தில் இருந்து பலரின் கனவாக இருந்தது. இந்நிலையில் இதை தற்போது சாத்தியப்படுத்தியுள்ளார் மணிரத்னம். முன்னதாக இந்தப் படத்தின் கேரக்டர்களை படக்குழு வெளியிட்டது.

பொன்னியின் செல்வன் டீசர்

பொன்னியின் செல்வன் டீசர்

தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபு, சூர்யா, அமிதாப்பச்சன் உள்ளிட்டவர்கள் இந்த டீசரை வெளியிட்டுள்ளனர். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளது. இந்த டீசருக்கு பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

தனஞ்செயன் பாராட்டு

தனஞ்செயன் பாராட்டு

பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் படத்தின் டீசர் மிகவும் பிரில்லியன்ட்டாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லெஜண்ட் மணிரத்னத்தின் படைப்பு என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதுபோல பல பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் டீசர் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 விக்ரம் பிரபு அப்டேட்

விக்ரம் பிரபு அப்டேட்

பிரபல விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளையும் படத்தின் டீசருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்தப் படத்தில் 30க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளதை குறிப்பிட்டுள்ள விக்ரம் பிரபு படம் மல்ட்டி ஸ்டாரர் படம் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

சுகாஹினி பாராட்டு

சுகாஹினி பாராட்டு

மணிரத்தினத்தின் மனைவியும் பிரபல நடிகையுமான சுகாஹினி மணிரத்னமும் டீசர் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நடிகர் சாந்தனு உள்ளிட்டவர்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டீசர் வெளியீட்டிற்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X