விஜயகாந்துக்கு கொரோனா.. பிரபலங்கள் கவலை.. விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக உருக்கம்!

சென்னை: நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவலையளிப்பதாக இயக்குநர் பாரதிராஜா உட்பட பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Vijayakanth tests positive for Corona | OneIndia Tamil

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலம் பெற வேண்டும் என கட்சி தொண்டர்களும், அரசியல் கட்சியினரும் திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா

அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் குறித்து டிவிட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்குஅப்பாற்பட்டு, மிகச் சிறந்த மனிதர். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி
கவலையளிக்கிறது. அவர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப பிரார்த்திப்போம் என தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமார்

இதேபோல் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாரும் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி டிவிட்டியுள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டில், தேமுதிக தலைவரும், அருமை நண்பருமான திரு.விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.. என குறிப்பிட்டுள்ளார்.

சீராக உள்ளது

சீராக உள்ளது

இதனிடையே மருத்துவமனை நிர்வாகம், விஜயக்காந்தின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் விஜயகாந்துக்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

விஜயகாந்த் விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜயகாந்த் நலம் பெற வேண்டி #vijayakanth என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X