ஹோலி ஹோலி.. திரைப்பிரபலங்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் இந்த ஹோலி பண்டிகை. இந்தியாவில் வாழும் வட இந்திய இந்துக்களால் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹோலி தினத்தில் கலர் பொடிகளை தூவி விளையாடுவது வழக்கம். வட இந்தியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த ஹோலியை பல பிரபலங்களும் வண்ண பொடிகளை தூவி கொண்டாடி உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் இவர், ஹோலி பண்டிகையை மகள் ஐஸ்வர்யா, பேரன் லிங்கா, யாத்ராவுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். இந்த போட்டோவை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் ஹோலி வாழ்த்து கூறியுள்ளார்.

ராஷ்மிகா: கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். கீதா கோவிந்தம் படத்தில் நடித்ததோடு அவரது திரைவாழ்க்கை மாறிப்போனது. ஒரே இரவில் தெலுங்கு மாநிலங்களின் சென்சேஷனல் நடிகையான இவர், இப்போது டாப் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா, படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்: கார்த்திக் நடித்த தீரன், என்,ஜி.கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் இவர் கடந்த மாதம் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை கரம் பிடித்தார்.திருமணம் முடிந்த கையோடு ஷூட்டிங்கிற்கு கிளம்பி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ரகுல். இவர் தனது காதல் கணவருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கியாரா அத்வானி: பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி ஃபுக்லி எனும் ஹிந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். முன்னாள் இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய ஷெர்ஷா படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு ஜோடியாக டிம்பிள் சீமா எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இவர் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர், ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இவர் தனது கணவருடன் மகிழ்ச்சியாக ஹோலி கொண்டாடிய போட்டோவை பகிர்ந்து அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

ஹோலி கொண்டாட்டம்: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது படப்பிடிப்பு தளத்தில் டைகர் ஷெராஃப், திஷா படானி ஆகியோருடன் ஹோலி பண்டிகை கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அக்ஷய் குமார் , டைகர் ஷெராப் மீது வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றி விளையாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.



Click it and Unblock the Notifications











