கே.வி ஆனந்த் மரணம்.. அதிர்ச்சியா இருக்கு.. தமிழ்த் திரைப் பிரபலங்கள் கண்ணீர்.. இரங்கல்!
சென்னை : பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் மாரடைப்பு காரணமானார். அவர் உயிரிழந்த செய்தி திரையுலகினரை ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான கேவி ஆனந்த், இந்தி, தமிழ்,மலையாளம், தெலுங்கு என பல மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழில் முதல்வன், செல்லமே, விரும்புகிறேன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

திரைப்பிரபலங்கள் இரங்கல்
சூர்யா நடித்த காப்பான் தனுஷ் நடித்த அனேகன், ஜீவா நடித்த கோ, விஜய் சேதுபதி நடித்த கவண் உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் கேவி ஆனந்த். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
வார்த்தைகளுக்கு அப்பாற்றட்ட வேதனை
இயக்குன கேவி ஆனந்த் மாரமடைப்பால் இறந்ததை கேள்விப்பட்டு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வேதனை அடைந்தேன். இளமையும் திறமையும் உடையவரை சினிமா உலகம் இழந்து விட்டது. மனம் வேதனை அடைகிறது என்று ராதா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என்றும் நினைவில் இருப்பீர்
நடிகர் அல்லு அர்ஜூன் தனது டவிட்டர் பக்கத்தில் கேவி ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில். கே.வி. ஆனந்த், இனி இல்லை என்ற இந்த சோகமான செய்திட்டே எழுந்தேன். அற்புதமான கேமராமேன், சிறந்த இயக்குனர் மற்றும் மிகவும் நல்ல மனிதர். ஐயா நீங்கள் எப்போதும் நினைவில் இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
நம்பவே முடியவில்லை
நடிகை குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பக்க்ததில் நம்பவே முடியவில்லை என்று தனது இரங்களை பதிவிட்டுள்ளார். மேலும், அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் பதிவிட்டுள்ளார்.
ஆன்மா சாந்தி அடையட்டும்
மிகவும் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவருடன் நான் பணிபுரியும் மற்றும் பல விஷயங்களை தெரிந்துகொள்ளும் பாக்கியம் பெற்றேன். உங்கள் ஆம்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்று நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்ர் பக்க்ததில் பதிவிட்டுள்ளார்.
பேரதிர்ச்சி
கேவி ஆனந்த் அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் எனறு யோகி பாபு தனது இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல,கேவி ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு என்று தனது சோகத்தை பதிவிட்டுள்ளார்.
தங்க ஆத்மாவை இழந்தோம்
தொகுதிப்பாளினியும் நடிகையுமான ரம்யா சும்ரமணியன் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், நீங்கள் வேலை செய்யும் போது அந்த இடத்தில் எந்த சத்தமும் இருக்காது, நீங்களும் அவ்வாறே இருப்பீர்கள், நல்ல ஆத்மாக்களின் உயிர் வாழ, தகுதி இல்லாத ஒரு அசிங்கமான உலகம் மாறியது போல் தோன்றுகிறது, தூய்மையான மற்றும் தங்க ஆத்மாவை இழந்தோம் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











