செஞ்ச பிரார்த்தனை எல்லாம் வீணாப் போச்சே.. போய்விட்டாரே எஸ்.பி.பி., கதறும் திரையுலக பிரபலங்கள்
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நலக் குறைவு காரணமாக இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார்.
Recommended Video
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு ஒட்டுமொத்த திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு, பிரசன்னா, வரலக்ஷ்மி சரத்குமார் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வெங்கட் பிரபு இரங்கல்
கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நலம் மோசமான நிலைக்கு சென்றது. தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. இன்று நண்பகல் 1:04க்கு அவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அருண் விஜய் இரங்கல்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு செய்தி ஒட்டுமொத்த திரைத் துறையினரையும் தமிழ் மக்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் அருண் விஜய் Irreplaceable! அவருக்கு ஈடு இணையே கிடையாது என தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி இரங்கல்
என்றுமே எங்கள் வாழ்வோடு கலந்து இருப்பீர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சார் என நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதயத்தில் எப்போது இருப்பீர்கள்
நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான நாணயம் படத்தில் நடித்துள்ளார் எஸ்.பி. பாலசுப்ரமணியம், அவருக்காக ஏகப்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார். லெஜண்ட் ஆன உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் சார். உங்களுடைய சாதனைகள் எப்போதுமே எங்கள் இதயங்களில் நிறைந்து இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் இரங்கல்
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறிய தகவலை கேட்டதும் நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவே மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். கிரிட்டிகலாக இருக்கிறார் என்றும் வருத்தத்துடன் கூறினார். கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இசைத் துறைக்கு நீங்கள் ஆற்றிய சேவையை யாராலும் ஈடு செய்ய முடியாது என இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் திலக் இரங்கல்
காமெடி நடிகர் ரமேஷ் திலக் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் உனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் எப்போதும் எங்களோடு சேர்ந்ததே உங்கள் ஜீவனே" என எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல் வரிகளை போட்டு தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











