அய்யப்பனும் கோஷியும் இயக்குநர் திடீர் மரணம்.. சோகத்தில் மலையாள திரையுலகம்.. பிரபலங்கள் அஞ்சலி

திருவனந்தபுரம்: அனார்கலி, அய்யப்பனும் கோஷியும் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் சச்சிதானந்தம், நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.

Recommended Video

Ayyappanum Koshiyum director Sachy Passed Away | Filmibeat Tamil

பிரபல திரைக்கதை ஆசிரியரும், இயக்குநருமான சச்சியின் திடீர் மரணம் இந்திய திரை பிரபலங்களை மீண்டும் ஒரு மீளாத் துயருக்கு ஆழ்த்தியுள்ளது.

இந்த லாக்டவுன் நேரத்தில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தொடர்ந்து மரணித்து வருவது 2020ம் ஆண்டு மீதே பலருக்கும் ஒருவித வெறுப்பை உண்டாக்கி வருகிறது.

திரைக்கதையாசிரியர் டு இயக்குநர்

திரைக்கதையாசிரியர் டு இயக்குநர்

நடிகர் பிருத்விராஜின் டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கு திரைக்கதை எழுதிய சச்சி, அவரது ஃபேவரைட் ஹீரோவுடன் அனார்கலி மற்றும் அய்யப்பனும் கோஷியும் என இரு படங்களை இயக்கியுள்ளார். இந்த இரு படங்களிலும், நடிகர் பிஜூ மேனனும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெளியான அய்யப்பனும் கோஷியும் பல மொழிகளில் ரீமேக் ஆகவுள்ள நிலையில், அவை எதையும் பார்க்காமல் இயற்கை எய்திவிட்டார் சச்சி.

ஜான் ஆபிரகாம் இரங்கல்

சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய உரிமையை பெற்றுள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம், சச்சியின் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். "திறமையானவரை திரையுலகம் இழந்து விட்டது, அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார்.

மஞ்சு வாரியர் இரங்கல்

மஞ்சு வாரியர் இரங்கல்

தனுஷின் அசுரன் படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியர், மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான சச்சி, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அது பலனளிக்காமல் உயிரிழந்தது குறித்து வருத்தம் தெரிவித்து தனது ஆழ்ந்த இரங்கலை ஃபேஸ்புக் பக்கத்தில் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிடித்த நடிகர்

இயக்குநர் சச்சிக்கு மலையாள திரையுலகில் மிகவும் பிடித்தமான நடிகரான பிருத்விராஜ், சச்சியின் இழப்பை தாங்க முடியாமல் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கிறார். சச்சிதானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த உடனே நேரில் சென்று பார்த்த அவர், தற்போது, அவரது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

கதை சொல்வதில் மாஸ்டர்

கதை சொல்வதில் மாஸ்டர்

நடிகர் பிருத்விராஜின் மனைவி சுப்ரியா மேனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நீண்ட ஒரு ஸ்டோரியையும் பதிவு செய்துள்ளார். டிரைவிங் லைசென்ஸ் படத்தில் இருந்தே உங்களை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உங்களுடைய அபாரமான கதை சொல்லும் ஆற்றல் என்னை வியக்க வைத்தது. மலையாள திரையுலகில் மேலும், பல புதுமைகளை படைக்க வேண்டிய நீங்கள், இவ்வளவு சீக்கிரம் எங்களை பிரிந்து விட்டது வேதனை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X