புத்தாண்டை வரவேற்ற மழை …திரைப்பிரபலங்கள் நன்றி!

சென்னை : 2020ம் ஆண்டு பிறந்துள்ளதை கொண்டாடும் விதமாக திரைப்பிரபலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆண்டின் முதல் நாளே மழை பெய்ததையும் வரவேற்றுள்ள திரைப்பிரபலங்கள் மழைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

2019 முடிந்து 2020 பிறந்திருக்கிறது. இதை கொண்டாடும் நோக்கில் மக்கள் அனைவரும் நள்ளிரவு 12 மணியளவில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் ஆடல் பாடலுடன் புது வருடத்தை வரவேற்றனர். மேலும் ட்விட்டரில் பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் அதையடுத்து ரசிகர்களுக்கு இன்று சில சர்ப்ரைஸ்களும் காத்திருக்கிறது .

celebrities New Year wishes on twitter

புத்தாண்டு நாளான இன்று விடிந்ததும் மழை கொட்டி தீர்த்தது, சென்னை மற்றும் புறநகர்களில் நல்ல மழை பெய்தது. விடியற்காலை தொடங்கிய மழை 10 மணி வரை இடைவேளை விட்டு இடைவேளைவிட்டு பெய்தது. மழையுடன் பிறந்த இந்த புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த புத்தாண்டிற்கு பல நடிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர் . நடிகை ராதிகா தன் கணவர் நடிகர் சரத்குமாருடன் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றி புத்தாண்டு வாழ்த்தை கூறியிருக்கிறார். ராதிகா தற்போது கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் பெண்ணாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ராதிகா .

நடிகர் கார்த்தி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில் 2020 சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் மற்றும் இந்த ஆண்டு அனைத்து சந்தோஷங்களும் உங்களை அடையும் அதற்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். நடிகர் கார்த்திக்கு 2019ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்தது என்றே சொல்லலாம். கார்த்திக்கு இந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகியது. அதில் கைதி படம் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கிறது .

மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். கூடுதல் மகிழ்ச்சியாக ஆண்டின் தொடக்கத்திலேயே மண்ணை முத்தமிட்ட மழைக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் புத்தாண்டின் சர்ப்ரைசாக சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூரரை போற்று இந்த படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு விருந்து நேற்று மாலையே கிடைத்தது மாஸ்டர் பட முதல் பார்வை வெளியாகி சமூக வலைத்தள டிரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது .

சமூக வலைத்தளங்களில் கெட்டதை தவிர்த்து நல்லதை பேசியும் பகிர்ந்தும் வருகிறார்கள் அதை தாண்டி மழை பெய்தது மக்களை உற்சாகபடுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு நகர்புறங்களில் வெகுவாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் தண்ணீர் இன்றி தவித்தனர். ஆண்டின் முதல் நாளான இன்று மழை பெய்ததால் நிச்சயம் பஞ்சம் இருக்காது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

More from Filmibeat

Read more about: celebrities new year wishes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X