தொடர்ந்து ட்ரெண்டிங்கில் ஜாலியோ ஜிம்கானா பாடல்... பிரபலங்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

சென்னை : விஜய்யின் பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்தப் பாடலுக்காக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பாடலை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தொடர்ந்து யூடியூபை கலக்கி வருகிறது பாடல்.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு படம் தயாராகி வருகிறது. கடந்த மாதத்தில் இந்தப் படத்தின் முதல் பாடல் அரபிக்குத்து வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டது. தற்போது 20 கோடி வியூசை நெருங்கியுள்ளது.

ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸ்

ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸ்

இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகியுள்ளது. கலக்கல் காம்பினேஷனில் அனிருத் இசையும் சேர்ந்துக் கொள்ள படத்தின் பாடல் ரசிகர்களால் வெறித்தனமாக ரசிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கென காத்திருந்த ரசிகர்கள் தற்போது வியூஸ், லைக்ஸ், கமெண்ட்ஸ் என யூடியூபை கலக்கி வருகின்றனர்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

மேலும் பாடலுக்கு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி பீஸ்ட்டு என்று பாராட்டு தெரிவித்து, பாடலின் காட்சியையும் பதிவிட்டுள்ளார். இதேபோல படத்தில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி, சாங் எப்படி இருக்கு என்று கேட்டுள்ளார்.

இயக்குநர் ரத்னகுமார் வாழ்த்து

இயக்குநர் ரத்னகுமார் வாழ்த்து

இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் செல்பி புள்ள, குட்டி ஸ்டோரி பாடல்களுக்கு பிறகு தனது வாய்சில் இந்த பாடலை பாடி விஜய் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய் சார் பீஸ்ட் மோட் என்று பாராட்டியுள்ளார்.

விஜய்க்கு லவ் எமோஜி

விஜய்க்கு லவ் எமோஜி

படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும், பாடலை பாடிய தளபதி விஜய் சாருக்கு லவ் எமோஜியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பாடல் ராம் முத்துராம் சினிமாசிலும் பெரியத் திரையில் ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் உற்சாகமடைந்துள்ளனர்.

ரவுண்ட் 2 என பூஜா பதிவு

ரவுண்ட் 2 என பூஜா பதிவு

படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் ரவுண்ட் 2 என்று தெரிவித்துள்ளார். மீண்டும் ஆட்டம் போட ரெடியா என்றும் கேட்டுள்ளார். முன்னதாக அனிருத் தனது பதிவில் இது ஜாலியோ ஜிம்கானா நாள் என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே இந்தப் பாடலை பாடியுள்ள விஜய், நக்கல் மற்றும் பஃன்னுடன் பாடியுள்ளதாக நடிகர் சாந்தனு குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் ஜாலியோ ஜிம்கானா வாய்ஸ்

விஜய்யின் ஜாலியோ ஜிம்கானா வாய்ஸ்

நடிகை அதுல்யா ரவி தளபதியின் வாய்ஸ் எப்போதுமே ஜாலியோ ஜிம்கானா தான் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்கள் தற்போது முதலே இந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X