சிவகார்த்திகேயன் முதல் சாந்தனு வரை.. வலிமையால் வரலாறு படைத்த சிட்டிசனுக்கு பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
1990ம் ஆண்டு இயக்குநர் செண்பகராமன் இயக்கத்தில் வெளியான என் வீடு என் கணவர் படத்தில் ஒரு சின்ன ரோலில் முதன்முதலாக சினிமாவில் நடித்திருந்தார் நடிகர் அஜித்.
பின்னர், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பரிந்துரையால் 1993ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
1995ம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை படம் தான் நடிகர் அஜித்திற்கு முதல் வெற்றியை கொடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டு வெளியான காதல் கோட்டை படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க, அதன் பிறகு தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக பல வரலாறுகளை நடிகர் அஜித் படைத்துள்ளார்.

இவர் பெயர் சொல்லியே
சினிமா விழாக்கள், புரொமோஷன் நிகழ்ச்சிகள், விருது மேடைகள் என அனைத்தையும் பல ஆண்டுகளாக நடிகர் அஜித் தவிர்த்து வருகிறார். ஆனாலும், அனைத்து சினிமா நிகழ்ச்சிகளிலும், அவர் பெயர் சொன்னால் தான் அந்த அரங்கில் கைதட்டல்களும் விசில் சத்தங்களும் விண்ணை பிளக்கும் என அறிந்த பல நடிகர்களும் அஜித்தின் பெயரை பயன்படுத்தி வருகின்றனர்.

சிவகார்த்தியேன் வாழ்த்து
தல அஜித்தை பார்த்து நடிகராக வேண்டும் என பல இளம் நடிகர்களுக்கும் ஆசை ஏற்பட்டு சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்திருப்பார்கள். பல நடிகர்களின் ஃபேவரைட் நாயகனாகவும் நடிகர் அஜித் இருந்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து தனது விடா முயற்சியினால் சினிமாவில் நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சிவகார்த்திகேயனும் தீவிரமான அஜித் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரத்னகுமாருக்கு பிடிச்ச சீன்
முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே என தீனா படத்தின் இன்ட்ரோ பாடலான வத்திக்குச்சி பத்திக்காதுடா என்ற பாடலில் வரிகள் இருக்கும். அந்த வரிகளுக்கு அஸ்திவாரம் போட்டது அஜித்தின் முகவரி படம் தான். துரை இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான அந்த படம் தான் ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமாருக்கு மிகவும் பிடித்த படமாம். அதுவும் அந்த கிளைமேக்ஸ் காட்சி ரத்னகுமாரை ரொம்பவே இன்ஸ்பயர் ஆக்கியதாம்.

மங்காத்தா இயக்குநர்
மங்காத்தா எனும் மெகா பிளாக்பஸ்டர் படத்தை தல அஜித்துக்கு கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், மை டியர் தல.. ஹேப்பி பர்த்டே அண்ணா என வாழ்த்து தெரிவித்துள்ளார். மங்காத்தா 2 எப்போ வரும் சார் என அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தனது டிபியையும் அஜித் பர்த்டே காமன் டிபியாக மாற்றியுள்ளார் வெங்கட் பிரபு.

யாஷிகா வாழ்த்து
நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபியை வெளியிட்ட பிரபலங்களில் நடிகை யாஷிகா ஆனந்தும் ஒருவர். தல அஜித்தின் தீவிர ரசிகையான இவர், அஜித் பிறந்தநாளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், சிறந்த இதயம் கொண்ட சிறந்த நடிகர் நீங்கள், இதேபோல எப்போதுமே ஒளிர்ந்து கொண்டே இருங்கள் என வாழ்த்தியுள்ளார்.

பிரேம்ஜியின் கோரிக்கை
இயக்குநர் வெங்கட் பிரபு தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நிலையில், அஜித் ரசிகர்களுடன் இணைந்து கொண்டு அவரது தம்பியும் நகைச்சுவை நடிகரும் இசைக் காட்டேரியுமான பிரேம்ஜி, எங்களுக்கு மங்காத்தா 2 வேண்டும் என கோரிக்கை வைத்தபடி, அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

சாந்தனு வாழ்த்து
தல - தளபதி ரசிகர்களிடையே சண்டைப் போட்டுக் கொள்ள வேண்டாம் என அடிக்கடி நல்ல மனதுடன் பஞ்சாயத்து பேசி வரும் நடிகர் சாந்தனு, அஜித்தின் கோரிக்கையை ஏற்று காமன் டிபியை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது, தல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்காக, தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த காமன் டிபியை வெளியிட்டு, நடிகர் அஜித்துக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை நடிகை
நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாச்சலம் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தனது வாழ்க்கையில் பல மனிதர்கள் கடந்து சென்று இருந்தாலும், தல அஜித் தனது காலடி தடங்களை விட்டுச் சென்றுள்ளார் என உருக்கமான வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











