முதல் பால்லயே சிக்ஸர்.. புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து!

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Suriya Wishing Chief Minister Stalin | Stalin பதவி பிரமாணம் #TnCMStalin

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற கையோடு முன்னாள் முதல்வர் கருணாநிதி, அறிஞர் அண்ணா மற்றும் பெரியார் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்.

பின்னர் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க அன்பழகன் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

கோப்புகளில் கையெழுத்து

கோப்புகளில் கையெழுத்து

தொடர்ந்து தலைமை செயலகம் சென்ற ஸ்டாலின், கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு 4000 ரூபாய், ஆவின் பால் கட்டணம் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வது உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே சொன்னதை செய்த ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அரசியல் பிரமுகர்கள் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

முதல் பால்லயே சிக்ஸர்

அந்த வகையில் நடிகை ஆர்த்தி, ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை முதல் பால்லயே சிக்ஸர் என குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார். முன்னதாக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

நல்லாட்சி தாருங்கள்

இதேபோல் இயக்குநர் சேரனும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர்.. வாழ்த்துக்கள் சார்.. கட்சியின் கொள்கைக்கு கட்டுப்பட்டு படிப்படியாக ஒவ்வொரு நிலையை அடைந்து உயர்ந்து.. இன்று முதல்வராக.... உங்களின் பண்பான, பாங்கான அரசியல் தொடரட்டும் சார்.. நல்லாட்சி தாருங்கள் நாட்டு மக்கள் வாழ்த்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

நாடு நலம் பெறட்டும்

இதேபோல் இயக்குநர் பேரரசு பதிவிட்டுள்ள டிவிட்டில் முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் வாழ்த்துக்கள்! நாடு நலம் பெறட்டும்.. மக்கள் வளம் பெறட்டும்! என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X