என்னை அறிந்தால்... புகழ்ந்து தள்ளும் திரைப் பிரபலங்கள்

By Shankar

அஜித் - கவுதம் மேனன் கூட்டணியின் புதிய படத் தலைப்பான என்னை அறிந்தால் குறித்து திரையுலகினர் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

என்னை அறிந்தால் தலைப்பு குறித்து பலரும் கலவையான கருத்து கூறி வருகின்றனர். ட்விட்டரில் இந்தத் தலைப்புதான் நேற்று முழுக்க முன்னணியில் இருந்தது.

இந்தத் தலைப்பை அஜீத் ரசிகர்கள் பல கோணங்களில் அலசி, சமூக வலைதளங்கள் பதிவு எழுதி வருகிறார்கள்.

திரையுலக நட்சத்திரம் என்பதை மறந்து, சாதாரண ரசிகனாக திரையுலகினர் பலரும் 'என்னை அறிந்தால்' டைட்டிலை புகழ்ந்து வருகின்றனர்.

தனுஷ்

தனுஷ்

அடுத்து விஜய்யின் படத்தை தயாரிக்கவிருக்கும் தனுஷ் ட்விட்டரில் 'என்னை அறிந்தால்', அஜித் சாருக்கு பொருத்தமான டைட்டில். பவர்ஃபுல்லான 'மாஸ் - கிளாஸ்' டைட்டில். கவுதம் மேனன் டைட்டில் தேர்ந்தெடுப்பதில் சிறந்தவர்" என்று புகழ்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.

அனிருத்

அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் " ‘தல'க்கு ஏத்த டைட்டில். கௌதம் மேனன் அவரது சிறந்த படத்தை கொடுப்பார்" என்று கூறியுள்ளார்.

குஷ்பு

குஷ்பு

நடிகை குஷ்பு கூறுகையில், "இது அஜீத்துக்கு பவர்புல் தலைப்பு. அவரை தனிப்பட்ட முறையில் நன்கறிந்தவள் நான். இதைவிட பொருத்தமாக அவர் படத்துக்கு தலைப்பு வைக்க முடியாது. யார் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் தான் தானாகவே இருப்பவர் அஜீத்," என்று கூறியுள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

அருமையான, அர்த்தமுள்ள தலைப்பு என்று நயன்தாரா பாராட்டியுள்ளார். மேலும் பலரும் இந்தத் தலைப்பை பாராட்டி வருகின்றனர்.

நன்றி சொன்ன அஜீத்

நன்றி சொன்ன அஜீத்

இந்தத் தலைப்பையும் தன்னையும் பாராட்டி குவியும் வாழ்த்துகளுக்கு ட்விட்டரில் நன்றி கூறி வருகிறார் அஜீத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X