கொடை வள்ளல்.. பாராட்ட வார்த்தைகள் இல்லை.. மனிதனில்லை மஹான்.. லாரன்ஸை புகழ்ந்து தள்ளும் நடிகை!
சென்னை: கொரோனா தடுப்பு நிதியாக 3 கோடி ரூபாய் வழங்கியிருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸை திரைத்துறை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் லாரன்ஸ். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர வெறியர் என்று கூறும் அளவுக்கு அவருக்கு ரசிகராக உள்ளார்.
எழைகளுக்கு ஓடோடி உதவும் நடிகர்களின் பட்டியில் நிச்சயம் நடிகர் லாரன்ஸ்க்கு முதலிடத்தைதான் கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

பலருக்கும் உதவி
ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்ட பல ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். திருநங்கைகளுக்கும் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார் நடிகர் லாரன்ஸ். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் கேட்காமலே உதவிகளை செய்து வருகிறார். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் காலேஜ் ஃபீஸ் கட்ட முடியாமல் உதவி கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக உதவி செய்து வருகிறார்.

ரூ.3 கோடி நிவாரணம்
இந்நிலையில் நாட்டை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார் நடிகர் லாரன்ஸ். பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சமும், ஃபெஃப்ஸி அமைப்புக்கு 50 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ்.

லாரன்ஸ்க்கு பாராட்டு
மேலும் நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் ஏழை மக்களுக்கு 75 லட்சம் ரூபாய் என மொத்தம் 3 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ். லாரன்ஸ்க்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மனிதனில்லை மஹான்
நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவிட்டில், நடிகர் ராகவா லாரன்ஸ் போன்ற தன்னிகரற்ற கொடை வள்ளலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படி உதவுவது இவருக்கு புதுசும் இல்லை. நீங்கள் மனிதனில்லை மஹான். வாழ்க வாழ்க நீ எம்மான் என பாராட்டியுள்ளார்.
மாஸ்டர்
நடிகர் மனோபாலா பதிவிட்டுள்ள டிவிட்டில்,
கொரோனா ஊரடங்கு உத்தரவு.. நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் அவர்கள் ரூபாய் 3 கோடி நிதியுதவி.. மத்திய அரசுக்கு - 50 லட்சம்
தமிழக அரசுக்கு 50 லட்சம்
ஃபெஃப்ஸி அமைப்புக்கு - 50 லட்சம்
நடன கலைஞர்கள் சங்கம் - 50 லட்சம்
தொழிலாளர்கள் - 75லட்சம் நிதியுதவி செய்துள்ளார் திரு.ராகவா லரான்ஸ் அவர்கள் என பதிவிட்டுள்ளார்.
அஜித்துக்கும் வாழ்த்து
இதேபோல் இயக்குநர் மோகன்ஜியும் நடிகர் லாரன்ஸை வாழ்த்துகள் மாஸ்டர் என பாராட்டியிருக்கிறார். நடிகர் அஜித் ஒன்றேகால் கோடி ரூபாய் வழங்கிய போதும் நடிகை கஸ்தூரி, நடிகர் மனோபாலா மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











