twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவர் தலைவர்.. உடல்நலம் மட்டும் கைகொடுத்திருந்தால்.. விஜயகாந்துக்காக உருகும் பிரபலங்கள்!

    |

    சென்னை: கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய இடம் கொடுத்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    Recommended Video

    Live: Premalatha Pampering Vijayakanth | Cute Love Video | Lock Down Diaries

    கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அடக்கம் செய்ய சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட பலர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அடக்கம் செய்ய இடம்

    அடக்கம் செய்ய இடம்

    இதனை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தால் பெரும் வேதனையடைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், தன்னுடைய ஆண்டாள் அழகர் கல்லூரியில் உள்ள இடத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தார்.

    சொத்தை கொடுக்கும் கேப்டன்

    சொத்தை கொடுக்கும் கேப்டன்

    அவரது இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, பக்கம் பக்கமாக அறிக்கை விடுபவர்கள் மத்தியில், பிரச்சினையை விளக்கும் தெளிவான அறிக்கை; விளம்பரத்திற்காக அல்ல, விழிப்புணர்வுக்காக. பேச்சோடு நிற்காமல் செயல்; உடனடியாக மனமுவந்து சொத்தை கொடுக்கும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்- இவர் தலைவர். உடல்நலம் மட்டும் கைகொடுத்திருந்தால்... ஹூம்! என பதிவிட்டுள்ளார்.

    எப்போதும் இன்ஸ்பையரேஷன்

    எப்போதும் இன்ஸ்பையரேஷன்

    அவரது மற்றொரு பதிவில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சென்னையில் நடந்த ஒரு சம்பவத்தை தொடர்ந்து தனது தாராள மனித நேயத்தை காட்டியிருக்கிறார். கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அவரது கல்லூரி மைதானத்தை கொடுத்திருக்கிறர். சார் நீங்கள் எப்போதும் ஒரு இன்ஸ்பையரேஷன். ஒரு உண்மையான தலைவர் மற்றும் மிகவும் உண்மையான ஆன்மா விஜயகாந்த். ப்ளீஸ் அவருடைய சென்ஸிபிள் அறிக்கையை படியுங்கள் என அவரது அறிக்கையையும் ஷேர் செய்திருக்கிறார்.

    இலக்கியங்கள் காணாத வள்ளல்

    இலக்கியங்கள் காணாத வள்ளல்

    விஜயகாந்த் குறித்து இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலை பாராட்ட.. வாழவேண்டியரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்... உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள்.. கொரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்.. என குறிப்பிட்டுள்ளார்.

    வாழ்க கேப்டன்

    வாழ்க கேப்டன்

    இதேபோல் நடிகரும் இயக்குநருமான மனோபாலா, தனது டிவிட் பக்கத்தில் என்ன ஒரு மனுஷன்.. வாழ்க கேப்டன்..என குறிப்பிட்டுள்ளார். நடிகர் விவேக் நேற்றே நடிகர் விஜயகாந்தை பாராட்டி டிவிட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Celebrities praising Actor Vijayakanth for offering his college ground for burial due to corona deaths.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X