பதைபதைப்பிலிருந்து இறுதிவரை மீள முடியவில்லை. முற்றிலும் புதிய சேரன்.. புகழ்ந்து தள்ளிய இயக்குநர்!

சென்னை: இயக்குநர் சேரன் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படம் குறித்து பிரபல இயக்குநர் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

இயக்குநர் சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் அன்பாகவும் அக்கறையாகவும் பழகினார்.

குறிப்பாக புரணி பேசாமல் நேர்மையாக விளையாடினார். கவின், சாண்டி ஆகியோர் தன்னைப் பற்றி கேலி கிண்டல் என்று கலாய்த்த போதும் பின்னால் விமர்சித்தபோதும் அந்த சூழ்நிலையை மிகவும் பொறுமையாக கையாண்டார்.

ராஜாவுக்கு செக்

ராஜாவுக்கு செக்

இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார் சேரன். இந்நிலையில் சேரன் நடிப்பில் உருவான ராஜாவுக்கு செக் திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.

மழை இயக்குநர்

மழை இயக்குநர்

ஜெயம் ரவியின் மழை படத்தை இயக்கிய சாய்ராஜ்குமார் ராஜாவுக்கு செக் படத்தை இயக்கியுள்ளார். சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.

தங்கர் பச்சான்

தங்கர் பச்சான்

படத்தை பார்த்த பிரபலங்கள் சேரனின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் தங்கர் பச்சான் ராஜாவுக்கு செக் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சேரனை பாராட்டியிருக்கிறார். மேலும் படம் குறித்தும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் தங்கர் பச்சான்.

மீள முடியவில்லை

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நண்பன் சேரன் நடித்திருக்கும் "ராஜாவுக்கு செக்" பார்த்தேன். படம் முழுக்க விரவியிருக்கும் பதைபதைப்பிலிருந்து இறுதிவரை மீள முடியவில்லை. முற்றிலும் புதிய சேரன்! இன்றைய சமூகம் சிந்திக்க வேண்டிய பெரும் செய்தி கொண்ட இத்திரைப்படத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

நன்றி தங்கர்

தங்கர் பச்சானின் அந்த டிவிட்டை தனது பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ளார் இயக்குநர் சேரன். மேலும் மிக்க நன்றி தங்கர் என்றும் பதிவிட்டுள்ளார் சேரன். இயக்குநர் சேரன், தங்கர் பச்சானின் சொல்ல மறந்த கதை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நடிகைகள் மதுமிதா ரித்விகா உள்ளிட்ட பலரும் சேரனின் ராஜாவுக்கு செக் படத்தை படத்தை பாராட்டியுள்ளனர்.

ஆக்ஷன் திரில்லர்

இயக்குநர் சிம்புதேவன் பதிவிட்டுள்ள டிவிட்டில், ராஜாவுக்கு செக் பார்த்தேன். நன்றாக இருந்தது. 👍👍 தந்தைக்கும் மகளுக்குமான பரபரப்பான எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர்! நல்ல சமுதாய கருத்து! சிறப்பான பணி சேரன் சார், #சாய்ராஜ்குமார் & டீம். படம் பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார். சிம்பு தேவனின் இந்த டிவிட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சேரன், நன்றி சிம்புதேவன்... வருகைக்கும் வாழ்த்துக்கும்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X