கர்ணன்.. எக்ஸலென்ட் மூவி... மிஸ் பண்ணிடாதீங்க.. டாப் நடிகர் டிவிட்.. யாருன்னு பாருங்க!
சென்னை: கர்ணன் படம் குறித்து பிரபல டாப் நடிகர் டிவிட்டியிருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் கர்ணன். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று தியேட்டரில் கர்ணன் படம் ரிலீஸ் ஆனது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

நடிப்பு சிறப்பு
கர்ணன் படம் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு படம் என்றும் தனுஷின் நடிப்பு சிறப்பு என்றும் இப்படத்திற்காக நிச்சயம் தனுஷுக்கு விருது கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி
அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் கர்ணன் படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக கர்ணன் படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி, கர்ணன் படம் அற்புதமான படம் மிஸ் பண்ணிடாதீங்க என பதிவிட்டுள்ளார்.

சமுத்திரக்கனி
இதேபோல் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனியும் கர்ணன் படத்தை பாராட்டி டிவிட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் கர்ணா....... கர்ணன்...இன்னும் பிரமிப்பு அகலவில்லை...அதிர்வுகள் ஓயவில்லை...வென்றான்...தம்பி மாரி செல்வராஜ் அடுத்த தளத்திற்கு உயர்ந்து விட்டார்...உழைத்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

எஸ்ஆர் பிரபு
தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பதிவிட்டுள்ள டிவிட்டில், கொரோனா தொற்றுநோய்களுக்கு மத்தியிலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் திரும்பியிருப்பது மகிழ்ச்சி! முழுத் தொழிலுக்கும் நம்பிக்கை அளித்த பார்வையாளர்களுக்கு நன்றி! கர்ணன் படத்திற்கு மாஸ்ஸிவ ஓபனிங் கொடுத்த கர்ணன் டீம்முக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி
இதேபோல் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ள டிவிட்டில், கர்ணன்.. தனுஷ் நீங்கள் இன்னும் ஒரு முறை செய்துள்ளீர்கள். இந்த விலைமதிப்பற்ற படத்திற்கு நன்றி. முழு டீம்முக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். ஒவ்வொரு நடிப்பையும் நேசித்தேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











