ப்ளீஸ்... எஸ்பிபி சாருக்காக பிரே பண்ணுங்க.. ஏஆர் ரஹ்மான் முதல் பாரதிராஜா வரை.. உருகும் பிரபலங்கள்!
சென்னை: பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா தீவிரம் காரணமாக ஐசியூவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என திரைத்துறை பிரபலங்கள் பலரும் உருக்கமாக பிரார்த்தித்து வருகிறார்கள்.
Recommended Video
பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் லேசான கொரோனாத் தொற்று காரணமாக கடந்த 5ஆம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று வெளியிட்ட அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தது.

பெரும் அதிர்ச்சி
இந்நிலையில் இன்று பாடகர் எஸ்பி பாலசுப்பிமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையின் இந்த அறிக்கை திரைத்துறை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் பிரார்த்தனை
இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் ஒரு பக்கம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேநேரத்தில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் டிவிட்டரில் நலமடைய வேண்டும் என டிவிட்டி வருகின்றனர்.

ஏஆர் ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், பதிவிட்டுள்ள டிவிட்டில் அனைத்து இசைப் பிரியர்களும் என்னுடன் இணைந்து இந்த லெஜன்ட்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். எஸ் பி பாலசுப்பிரமணியம் அவருடை அற்புதமான குரலால் அதிக மகிழ்ச்சியை கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

போனி கபூர், ராதிகா
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் பதிவிட்டுள்ள டிவிட்டில் லெஜன்ட்ரி திரு எஸ்பி பாலசுப்பிரமணியன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா எஸ்பி பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய என்னுடைய பிரார்த்தனைகள் என கூறியுள்ளார்.

சின்மயி, தனுஷ்
பாடகி சின்மயி பதிவிட்டுள்ள டிவிட்டில் எஸ்பிபி சார் நலமடைய பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார். நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில் ப்ளீஸ் எஸ்பிபி சாருக்காக பிரே பண்ணுங்கள் என கேட்டுள்ளார்.

பார்த்திபன், குஷ்பு
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பதிவிட்டுள்ள டிவிட்டில் துக்கம் மனதை பிசைகிறது.. மீண்டு வரும் வரை. மீண்டு வர பிரார்த்தனை என தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள டிவிட்டில் நான் உணர்ச்சியில்லாமல் இருக்கிறேன். என் நினைவுகள் அனைத்து எஸ்பிபி சாருடன் உள்ளது. ஒரு அதிசயத்தை எதிர்பார்த்து, நம்மில் பெரும்பாலோர் மதிக்கும் மனிதரைப் பார்ப்போம், விரைவில் குணமடைவார். என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில், தன்னுடைய நண்பரான பாலு, தன்னம்பிக்கையானவர் வலிமையானவர். அவர் தொழும் தெய்வங்களும்
நான் வணங்கும் இயற்கையும்
அவரை உயிர்ப்பிக்கும்.. மீண்டு வருவார்
காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











