இரண்டு பாதியாக பிளந்த விமானம்.. இதயமே நொறுங்கிவிட்டது.. கோழிக்கோடு விபத்து.. பிரபலங்கள் அதிர்ச்சி!

கோழிக்கோடு: கேரளாவில் நிகழ்ந்த விமான விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரை பிரபலங்கள் பலரும் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Recommended Video

விபத்திற்கு இதுதான் காரணமா? பின்னணி தகவல்..

துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கேரளா வந்த விமானம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். இந்த விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

தரையிறங்கும் போது விமானத்தின் முன்பக்க டயர் பழுதானதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு பாதியாக உடைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பயணிகள், 2 விமானிகள், 4 ஊழியர்கள் இருந்தனர்.

மீட்புப் பணிகள்

மீட்புப் பணிகள்

இந்த விபத்தில் விமானி உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். விமானத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விமான விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரமான ஆண்டு

பயங்கரமான ஆண்டு

இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை திஷா பதானி பதிவிட்டுள்ள டிவிட்டில் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இறங்கும் போது விபத்துக்குள்ளானதை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். விமானத்தில் இருந்த பயணிகள், விமானிகள் மற்றும் குழுவினருக்கு என்னுடைய பிரார்த்தனைகள்.. பயங்கரமான ஆண்டு இது என குறிப்பிட்டுள்ளார்.

இதயமே நொறுங்கிவிட்டது

இதயமே நொறுங்கிவிட்டது

நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள டிவிட்டில் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான தகவல் இதயமே நொறுங்கிவிட்டது.. பிரார்த்தனைகள் என பதிவிட்டுள்ளார். நடிகை ஹன்சிகா மோத்வானி பதிவிட்டுள்ள டிவிட்டில், மற்றொரு கொடுமையான செய்தி.. விமானத்தில் பயணித்தவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் பிரார்த்தனைகள் என பதிவிட்டுள்ளார்.

பயமுறுத்தும் செய்தி

பயமுறுத்தும் செய்தி

நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஏர் இந்தியா விமானத்தில் இருந்த அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை! எல்லா இடங்களிலும் உண்மையில் பயமுறுத்தும் செய்தியாக வருகிறது என பீதியுடன் டிவிட்டியுள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில் பயங்கரமான செய்தி! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

விரைவில் மீள வேண்டும்

விரைவில் மீள வேண்டும்

நடிகை ராஷி கன்னா பதிவிட்டுள்ள டிவிட்டில் கேரளாவின் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானதை கேட்டு துயரமடைந்தேன் !! உறவுகளை இழந்த குடும்பங்களுக்காக பிரார்த்தனைகள்.. காயமடைந்தவர்கள் விரைவில் மீள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X