தூய்மையான காற்றை சுவாசித்தது போல் உள்ளது.. 'பொன்மகள் வந்தாள்' படம் குறித்து பிரபல நடிகர்!
சென்னை: பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை பார்த்தது தூய்மையான காற்றை சுவாசித்தது போல் உள்ளதாக பிரபல நடிகர் பாராட்டியுள்ளார்.
Recommended Video
ஜோதிகா நடிப்பில் நேற்று அமேஸான் பிரைமில் வெளியான படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா தயாரித்துள்ளார்.'பொன் மகள் வந்தாள்' திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்கியுள்ளார்.

வரவேற்பு
இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். முதல் முறையாக அமேஸான் பிரைமில் நேரடியாக வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகர் கிருஷ்ணா
பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரான கிருஷ்ணா தனது டிவிட்டர் பக்கத்தில் பொன்மகள் வந்தாள் படத்தை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் இதுபோன்ற ஒரு புதிய படத்தை பார்ப்பது ஃபிரஷான காற்றை சுவாசிப்பதாக உள்ளது.

வாழ்த்து
பொன் மகள் வந்தாள் தரமான படம் என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் இயக்குநர் ஜேஜே ஃபெட்ரிக், ஜோதிகா மற்றும் சூர்யா ஆகியோருக்கு வாழ்த்தும் கூறியிருக்கிறார் நடிகர் கிருஷ்ணா.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதி
இதேபோல் சீரியல் நடிகையான நீலிமா ராணியும் பொன் மகள் வந்தாள் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதில் பொன்மகள் வந்தாள் படத்தை பாராட்டி கைகளை தட்டியுள்ள நீலிமா, ஆமாம் தாமதிக்கப்பட்ட நீதி அநீதி.. என கருத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











