நடிகர் சிருவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.. த்ரோபேக் போட்டோக்களுடன் உருகிய அர்ஜூன்!
சென்னை: நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அவருடைய நினைவுகளை பகிர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Recommended Video
பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி மரணமடைந்தார். கடுமையான கார்டியாக் அரெஸ்ட்டால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி சர்ஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. சிரஞ்சீவி சர்ஜா மரணமடைந்த போது அவரது மனைவியான நடிகை மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

அர்ஜூனின் மருமகன்
39 வயதில் நடிகர் சிரு மரணமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மறைந்த நடிகர் சிரு, நடிகர் அர்ஜூனின் அக்காள் மகன் ஆவார்.

நினைவுகளை பகிர்ந்து..
இந்நிலையில் சிருவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நடிகர் அர்ஜூன், அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன், நடிகை அனன்யா ஆகியோர் சிரஞ்சீவி சர்ஜாவுடன் எடுத்த பழைய போட்டோக்களை ஷேர் செய்து அவருடைய நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

வாழ்நாள் முழுக்க மிஸ் பண்ணுவேன்
நடிகர் அர்ஜூன், சிரஞ்சீவி சர்ஜா சிறு வயது பையனாக இருந்தபோது அவருடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், ஒரு வருடம் ஆகிறது, ஆனால் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை மிஸ் செய்வேன் சிரு மகனே.. நிலையான மகிழ்ச்சியான புன்னகை நீங்கள் எங்கிருந்தாலும் அழிக்கப்படாது என்று நம்புகிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அழகான தருணங்கள்
இதேபோல் நடிகர் அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜூன் சிறு வயது முதல் கடைசி வரை சிருவுடன் இருந்த அழகான தருணங்களை வீடியோவாக ஷேர் செய்து அவரை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் எப்போதும் எங்கள் இதயங்களில் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

நினைவுகள்எ என்றும் நீடிக்கும்
இதேபோல் கன்னட நடிகையான அனன்யாவும் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் அவரது மனைவி மேக்னா ராஜ் ஆகியோருடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் விஷயங்கள் முடிவடையும் ஆனால் நினைவுகள் என்றும் நீடிக்கும் என பதிவிட்டுள்ளார்.

இதயத்தால் மறைக்க முடியாது
இதேபோல் பிரபல கன்னட இயக்குநரும் சிருவின் நண்பருமான பன்னக பரனா, சிரஞ்சீவி சர்ஜாவின் போட்டோவுக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அருகில்.. தொலைவில்.. நீங்கள் எங்கிருந்தாலும் எங்கள் இதயத்தில் இருப்பீர்கள், இதயத்தால் எதையும் மறைக்க முடியாது... நாங்கள் உன்னை நேசிக்கிறோம் சிரஞ்சீவி சர்ஜா.... உங்கள் மகனை நான் நீங்கள் என்று ஏற்றுக்கொண்டேன்.... நான் நிச்சயமாக உங்களை மிஸ் பண்ணுவேன்.... நீ அதை ஈடுசெய்வது நல்லது.... என்றென்றும் என பதிவிட்டுள்ளார்.

வெள்ளித் தொட்டில்..
சிரஞ்சீவி சர்ஜா மரணமடைந்த 5 மாதங்களில் அவரது மனைவி மேக்னா ராஜ் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குட்டி சிருவுக்காக வெள்ளி தொட்டில் செய்து கொடுத்தார் சிருவின் தம்பி துருவா சர்ஜா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











