அருண் விஜய் முதல் மாதவன் வரை.. சூரரைப்போற்று படம் குறித்து என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை: சூரரைப்போற்று திரைப்படம் அமேஸானில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களின் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நேற்று இரவு அமேஸான் பிரைமில் ரிலீஸானது. படம் தொடர்ந்து பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் திரைத்துறை பிரபலங்களும் முன்னணி நடிகர்களும் சூரரைப்போற்று படம் குறித்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றர்.

அருண் விஜய்
நடிகர் அருண்விஜய் பதிவிட்டுள்ள டிவிட்டில், சூரரைப்போற்று படத்தில் அவுட் ஸ்டாண்டிங் பர்ஃபாமன்ஸ் சூர்யா பிரதர். எல்லா கதாப்பாத்திரங்களும் அவர்களுடைய பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். ரொம்பவே ஊக்கப்படுத்தும்
வகையில் உள்ளது. இயக்குநர் சுதா மேம் மற்றும் மொத்த டீமுக்கம் ஹேட்ஸ் ஆஃப்.. சிறப்பாய் செய்திருக்கிறீர்கள்.. மேலும் உயர பறக்க வாழ்த்துகள் .. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அஜய் ஞானமுத்து
இயக்குநர் அஜய் ஞானமுத்து சூரரைப்போற்று படம் குறித்து பதிவிட்டுள்ள டிவிட்டில், முழு பிளாக்பஸ்டர் படத்தை காண 9 மாதங்கள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. சூரரைப்போற்று இதயம் நிறைந்தது. முழுக்க மேஜிக்கல்.. சூர்யா சார் வேற மாதிரி பண்ணீயிருக்கீங்க.. டெக்னிக்கல் டீம் அதிகம் ஸ்கோர் பண்ணியுள்ளது. படம் உயர்ந்துவிட்டது.. ஜிவி பிரகாஷ் மற்றும் மொத்த டீமுக்கும் பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

மைல் ஸ்டோன்
தெலுங்கு நடிகர் மோகன் பாபு பதிவிட்டுள்ள டிவிட்டில் ஆகாசம் நீஹாது ரா படம் அமேஸான் ரிலீஸில் பெஸ்ட். சூர்யா ஒரு நல்ல நடிகர்.. அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி.. அற்புதமான இயக்குநர் சுதா கொங்கரா.. இந்த படம் ஒரு மைல் ஸ்டோனாக இருக்க வேண்டும்.. கடவுளின் ஆசிர்வாதங்கள்.. சூரரைப்போற்று.. என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மாதவன்
இதேபோல் நடிகர் மாதவன் பதிவிட்டுள்ள டிவிட்டில் சூர்யா எக்ஸ்ட்ராடினரி படம்.. ஆல் த வெரி பெஸ்ட் புரோ.. இந்த அற்புதமான படைப்பை உலகம் காண காத்திருக்க முடியாது.. பிரிலியன்ட்.. என பாராட்டியுள்ளார்.

மெய் சிலிர்க்க வைக்கிறது
இதேபோல் நடிகர் ஷாந்தனு பதிவிட்டுள்ள டிவிட்டில் சூரரைப்போற்று படம் குறித்து அற்புதமான விமர்சனங்களை கேட்கிறேன்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சூர்யா புரோ.. ஜிவி பிரகாஷ் புரோ.. மற்றும் சுதா மேம்.. படத்தை பார்க்க
காத்திருக்கும் நேரங்களில் அதன் விமர்சனங்களே மெய்சிலிர்க்க வைக்கிறது. மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்.. என பதிவிட்டுள்ளார்.

ஆர்கே சுரேஷ்
இதேபோல் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில் சிறந்த முயற்சி, எக்ஸலென்ட் பர்ஃபாமன்ஸ்.. மொத்த டீமுக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார் .

இயக்குநர் மோகன் ஜி
இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ள டிவிட்டில்
சூரரைப்போற்று இன்டெர்நேஷனல் கன்டென்ட்.. மோட்டிவேஷனல்.. இயக்குநர் சுதா மேடமுக்கு ஹேட்ஸ் ஆஃப்.. ஒரு சமூகவாதி உண்மையான கனவுகளை கொண்டிருந்தால் அவருடைய மக்களே அவருக்கு க்ரவுட் ஃபண்டிங் மூலம் அவர் வெற்றி பெற உதவி செய்வார்கள்.. வாழ்த்துகள்.. சூர்யா சார் உங்கள் கேரியரிலேயே சிறந்த படம்.. ஜிவி பிரகாஷ் பிஜிஎம் செம என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











