தேசிய சல்யூட்.. கங்கனா, தமன்னா, பவன் கல்யாண் என பல பிரபலங்களும் கைதட்டி பாராட்டு!

சென்னை: என்ன ஒரு ஒற்றுமையான நாடு நம் நாடு, ஒரே ஒரு உத்தரவு, அத்தனை மக்களும் சுய கட்டுப்பாட்டுடன் இன்று காலை முதல் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து வருகின்றனர்.

Recommended Video

பிரபலங்கள் கைதட்டி ஆரவாரம் | Janata Curfew | Celebrity Clapping

மேலும், டான்னு மாலை 5 மணிக்கு, மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து கைகளை தட்டி தேசிய சல்யூட் அடித்து வருகின்றனர்.

பொதுமக்களுடன் இணைந்து கங்கனா ரனாவத், தமன்னா, பவன் கல்யாண், மாதவன் என பல நட்சத்திரங்களும் கொரோனாவுக்கு எதிராக உயிரை கொடுத்து போராடி வரும் மருத்துவர்களுக்காக கரவொலிகளை எழுப்பி வருகின்றனர்.

கைதட்டிய கங்கனா

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தனது குடும்பத்தினருடன் இணைந்து மாலை 5 மணிக்கு ஷார்ப்பாக கைதட்டி, கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவ காவலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் உடன் அவரது தங்கை ரங்கோலி சாண்டல் உடனிருந்தார். கங்கனா ரனாவத்தின் இன்ஸ்டா பக்கத்தில் அந்த வீடியோ வெளியாகி உள்ளது.

கரண்டியால் தட்டிய தமன்னா

கொரோனா வைரஸ் பரவாமல் பார்த்துக் கொள்ள வீட்டுத் தோட்டத்திலேயே யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நடிகை தமன்னா, தனது பால்கனியில் குடும்பத்தாருடன் இணைந்து கரண்டியால் பாத்திரத்தை தட்டி, ஒலியெழுப்பி தேசத்தை காக்க போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனது ராயல் சல்யூட்டை அடித்துள்ளார்.

மணி அடித்த பவன்

கொரோனா வைரஸ் பராவாமல் தடுக்க போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், தூய்மை தொழிலாளிகள், மீடியா மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து, இறைவனை வணங்கி மணி அடித்து தனது சல்யூட்டை தெரிவித்தார் பவன் கல்யாண்.

குடும்பத்துடன் வருண் தவான்

மக்கள் ஊரடங்கை காலை முதல் கடைபிடித்த வந்த மக்களுக்கு நன்றி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நமது போராளிகளான மருத்துவர்களை பாராட்டி கை தட்டி வருகின்றனர். மேலும், மக்கள் இன்று ஒரு நாள் மட்டுமின்றி கொரோனா பாதிப்பு முற்றிலும் அகலும் வரை இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கியாரா அத்வானி

குடும்பத்தை விட்டும், வீட்டை விட்டும் வெளியே தைரியமாக கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பராவாமல் தடுக்க போராடும் போராளிகளே, எங்களின் நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள் என பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, தனது குடும்பத்துடன், தட்டில் கரண்டியை வைத்து சத்தமாக தட்டியபடி, நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் பாராட்டு

வீட்டு வாசலுக்கு முன்பு குடும்ப உறுப்பினர்களோடு நின்று கொண்டு, கரண்டியை வைத்து சாப்பிடும் தட்டால், பயங்கர உற்சாகத்துடன், தேசத்திற்காக போராடும் போராளிகளுக்கு ராயல் சல்யூட் அடிக்கும் விதமாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பாராட்டும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

குடும்பத்துடன் சிரஞ்சீவி

டோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தனது குடும்பத்துடன் வீட்டு வாசல் முன் நின்று, கைதட்டி தனது நன்றியை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொது மக்கள் தேவையில்லாமல், வெளியே வரக்கூடாது, கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வீடியோக்களையும் முன்னதாக அவர் பதிவிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X