என் இனிய மக்களே.. பாசத்திற்குரிய பாரதிராஜாவுக்கு இன்று தான் பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: பதினாறு வயதினிலே படத்தில் இயக்குநராக அறிமுகமாகி இயக்குநர் இமயமாக உயர்ந்து நிற்கும் பாசத்திற்குரிய நம்ம பாரதிராஜாவுக்கு இன்று 78வது பிறந்தநாள்.
Recommended Video
ஜூலை 17ம் தேதி தான் பாரதிராஜாவின் பிறந்தநாள் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல பல பிரபலங்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.

அவரது முதல் படமான 16 வயதினிலே படத்தின் சென்சார் சான்றிதழ் வாங்கிய ஜூலை 17ம் தேதி தான் அவரது பிறந்தநாள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், அவரது உண்மையான பிறந்தநாள் இன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜாவின் மகன் மனோஜ், கிழக்கே போகும் ரயிலே படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ராதிகா சரத்குமார், பி.ஆர்.ஓ. நிகில் முருகன் உள்ளிட்ட சில பிரபலங்கள் பாரதிராஜாவின் உண்மையான பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சீதக்கோ சிலுக்கா, முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, அந்திமந்தாரை மற்றும் கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களுக்காக 6 முறை தேசிய விருதை பெற்றுள்ளார் பாரதிராஜா.
கடந்த 2004ம் ஆண்டு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











