ஹேப்பி பர்த்டே தலைவா... சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய பிரபலங்கள்
சென்னை : சூப்பர் ரஜினிகாந்த் இன்று தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 1975 ம் ஆண்டு டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரஜினி.
ஸ்டைல், பஞ்ச் டயலாக், மாஸ் என்றாலே அது சூப்பர் ஸ்டார் தான் என்னும் அளவிற்கு ஸ்டைலுக்கு அடையாளமாக மாறி உள்ளார் ரஜினிகாந்த். வில்லன், கேரக்டர் ரோல், கெஸ்ட் ரோல், ஹீரோ என பல ரோல்களில் நடித்து விட்டார் ரஜினி. இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பொங்காலி என பல மொழிகளில் 170 க்கும் அதிகமான படங்களில் ரஜினி நடித்துள்ளார்.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முதல் HBDSuperstarRajinikanth என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. இதில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்த்தை பிரபலங்கள் எப்படி வாழ்த்தி உள்ளார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

கலைப்புலி எஸ்.தாணு
எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் மோஷன் போஸ்டரை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஹேப்பி பர்த் டே.

சன் பிக்சர்ஸ்
இந்திய சினிமாவின் கெளரவம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நயன்தாரா
ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கோடிக்கணக்கானவர்களுக்கு உண்மையான இன்ஸ்பிரேஷன், அனைவருக்கும் குரு. God bless U தலைவா.

ஆர்.கே.சுரேஷ்
எங்களின் எவர் க்ரீன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிரியங்கா மோகன்
இந்திய சினிமாவின் கடவுள் ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சீனு ராமசாமி
ஹேப்பி பர்த் டே சார்
Recommended Video

நடிகர் சதீஷ்
தலைவாாாாாாா ஹேப்பி பர்த் டே


Click it and Unblock the Notifications











