எதற்கும் துணிந்தவன் படம் எப்படி... இவங்கெல்லாம் என்ன சொல்றாங்க தெரியுமா ?

சென்னை : டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Etharkkum Thunindhavan Review | ET Review | Yessa ? Bussa ? | Suriya |Priyanka Arul Mohan|Pandiraj

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் அனைத்து தரப்பிலும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. ஃபஸ்ட் ஆஃப் குடும்ப என்டர்டைன்மென்ட்டாக உள்ளது. சூர்யாவின் சினிமா கெரியரிலேயே இல்லாத அளவிற்கு அற்புதமான என்ட்ரி இந்த படத்தில் அமைந்துள்ளது. அசத்தலான ட்விஸ்ட் உடன் இன்டர்வெல், செகண்ட் ஆஃப் வேற லெவல் என அனைவரும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் திரை பிரபலங்கள் எதற்கும் துணிந்தவன் பற்றி என்ன சொல்கிறார்கள் என இங்கே பார்க்கலாம்.

சிபி சத்யராஜ்

சிபி சத்யராஜ்

சூர்யா அண்ணா, டைரக்டர் பாண்டிராஜ் சார், சன் பிக்சர்ஸ், அப்பா மற்றும் ஒட்டுமொத்த எதற்கும் துணிந்தவன் டீமுக்கும் படம் பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்துக்கள் .

கார்த்தி

கார்த்தி

எதற்கும் துணிந்தவன் இன்று முதல் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. அண்ணா சூர்யாவின் அன்பான ஃபேன்சுக்கு உண்மையான ஃபீஸ்டாக இருக்கும். ஒட்டுமொத்த குடும்பங்களுக்கும் பொழுதுபோக்காக அமையும். டைரக்டர் பாண்டிராஜ் சார் மற்றும் டீமுக்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

சூர்யா மற்றும் டைரக்டர் பாண்டிராஜ் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த எதற்கும் துணிந்தவன் டீம் சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர். பகல் ஷோவை ஐதராபாத்தில் பார்க்க போகிறேன்.

டி.இமான்

டி.இமான்

எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிக அருமையாக இருந்தது. படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தது. சராசரி சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களும் எந்தவித தயக்கமும் இல்லாமல், எங்கும் நகராமல் தியேட்டரிலேயே இருக்க செய்யும் படமாக இருக்கும்.

எதற்கும் துணிந்தவன் மாஸ் ஹிட் அடையும். பிளாக் பஸ்டர் படமாக அமைவது உறுதியாகி விட்டதாக முதல் நாளே பலரும் கருத்து கூறி வருகின்றனர். மீண்டும் சூர்யா வேட்டி - சட்டையில் கிராமத்து கெட்அப்பில் வந்து காமெடி செய்து அசத்தி இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X