67 வது பிறந்தநாள் காணும் கமல்... ட்விட்டரில் வாழ்த்து பகிர்ந்த பிரபலங்கள்
சென்னை : உலக நாயகன் கமலஹாசன் இன்று தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக ட்விட்டரில் HBDKamalHassan என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கமல் தற்போது நடித்து வரும் விக்ரம் படம் வெற்றி அடையவும் பலர் வாழ்த்தி வருகின்றனர். அப்படி கமலுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து பகிர்ந்த பிரபலங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

கவிஞர் வைரமுத்து
எம்.ஜி.ஆர் பற்றிக்
கலைஞர் சொன்னதுபோல்
கமல் பற்றி
நானும் சொல்லலாம்:
"என் நாற்பதாண்டுகால நண்பர்"
தனிவாழ்வு கலைவாழ்வு பொதுவாழ்வு மூன்றிலும்
பட்டுத் தெளிந்த பட்டறிவாளர்
வெற்றி தோல்வி
அவரை என்செய்யும்?
தலைகீழாய்ப் பிடித்தாலும்
மேல்நோக்கி எரியும் தீச்சுடர்
எரி சுடரே
எழு சுடரே!

நடிகை கஸ்தூரி
உலக நாயகன் மக்கள் நீதி மய்யம் தலைவர் பத்மஸ்ரீ கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. அதோடு, மைக்கேல் மதன காமராஜன் பட பாடலுக்கு தான் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அதன் லிங்கை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

டைரக்டர் மோகன்ராஜா
ஹேப்பி பர்த் டே கமலஹாசன் சார். எப்போதும் உங்களின் மிகப் பெரிய ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் டைரக்டர் மோகன்ராஜா.

நடிகர் ஆர்யா
மாபெரும் கலைஞர் கமலஹாசன் சாருக்கு அற்புதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். உங்களின் விக்ரம் படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை என நடிகர் ஆர்யா வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு
எனக்கு பிடித்த எனது அருமை நண்பர் கமலஹாசனுக்கு இனிமையிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எனது வாழ்க்கையில் எப்போதும் மகவும் ஸ்பெஷலான மனிதர் என வாழ்த்து பதிவிட்டுள்ளார் குஷ்பு.

நடிகை ராதிகா சரத்குமார்
ஹேப்பி பர்த்டே எனது குரு கமல் சார். நீங்கள் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளீர்கள். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சார் என தெரிவித்துள்ளார் பிருந்தா.

பிருந்தா மாஸ்டர்
ஹேப்பி பர்த்டே எனது குரு கமல் சார். நீங்கள் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளீர்கள். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளம் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சார் என தெரிவித்துள்ளார் பிருந்தா.


Click it and Unblock the Notifications











