twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகக்கோப்பை அரையிறுதியில் சொதப்பும் இந்திய அணி.. பிரபலங்கள் என்ன சொல்றாங்க?

    |

    சென்னை: உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி படு மோசமாக சொதப்பி வரும் நிலையில் திரை பிரபலங்களும் கிரிக்கெட் மேட்ச் குறித்து டிவிட்டியுள்ளனர்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணியும் நியூசிலாந்த் அணியும் மோதுகின்றன. நேற்று தொடங்கிய இப்போட்டியில் நியூசிலாந்த் 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.

    அப்போது மழை குறுக்கிட்டதால் பாதியில் ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்த் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது.

    விக்கெட்டுகளை இழந்து தவிப்பு

    விக்கெட்டுகளை இழந்து தவிப்பு

    இதைத்தொடர்ந்து ஆட தொடங்கிய இந்திய அணி மளமள வென விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப 22 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 82 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

    கஸ்தூரி டிவிட்

    இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். திரை பிரபலங்கள் பலரும் இந்திய அணியின் சொதப்பல் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நடிகை கஸ்தூரி பதிவிட்ட டிவிட்டில் இந்திய அணியின் டாப் ஆர்டர் நொறுங்கிவிட்டது. 71-5 22 ஓவர்கள். நமது அணியை காப்பாற்ற என்னை போல் நீங்களும் மழை பெய்ய வேண்டினால்.. ஆட்டம் நிறுத்தப்பட்டு டிஎல்எஸ் முறைப்படி பார்த்தாலும் நாம அவுட்டுதான்.. என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

    பாடலாசிரியர் விவேக்

    பாடலாசிரியர் விவேக் பதிவிட்டுள்ள டிவிட்டில் தினேஷ் கார்த்திக் போயிவிட்டார்.. இன்னும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார் பாடலாசிரியர் விவேக்.

    நடிகர் சித்தார்த்

    நடிகர் சித்தார்த் தோனி அன்ட் ஜட்டு என ஜடேஜாவை குறிப்பிட்டு கும்பிடு போட்டுள்ளார்.

    English summary
    Celebrities sharing their views on World cup cricket semi final.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X