சினிமாவில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு உறுதி மொழி ஏற்ற பிரபலங்கள்
திரைப்பட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமான சுதா கொங்கரா ஓ வுமெனியா! அறிக்கை 2023-யின் பின்னணியில் இந்திய பொழுது போக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு அவர்களுடைய ஆதரவு அளிப்பதாக உறுதி மொழி அளித்தனர்

ஆலியா பட், தகுபட்டி சுரேஷ் பாபு, சுப்ரியா மேனன், சுப்ரியா யார்லாகாட்டா, ஷோபு யார்லாகாட்டா, விக்ரமாதித்யா மோட்வானே, மற்றும் அதிகமான பொழுதுபோக்கு ஆளுமைகள் இந்த துறையில் பன்முகத்தன்மைக்கான அவர்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்
ஆர்மேக்ஸ் மீடியா மற்றும் ஃபிலிம் கம்பானியன் தலைமை வகிக்க , மற்றும் ப்ரைம் வீடியோ ஆதரவளிக்கும் ஓ வுமேனியா! இந்திய பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவம் குறித்த இந்தியாவின் மிக முழுமையான அறிக்கை ஆகும்
இந்தியாவின் மிகவும் நேசிக்கப்படும் பொழுதுபோக்கு இடமான ப்ரைம் வீடியோ, இந்திய பொழுதுபோக்கில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த மிக முழுமையான அறிக்கையான ஓ வுமெனியா! அறிக்கையின் சமீபத்திய பதிப்பை வெளியிட்டது. மீடியா ஆலோசனை நிறுவனமான, ஆர்மேக்ஸ் மீடியா, இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ப்ளாட்ஃபார்ம் ஆன , ஃபிலிம் கம்பேனியானால் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் உருவாக்கப்பட்டு மற்றும் ப்ரைம் வீடியோவின் ஆதரவு பெற்ற இந்த ஆய்வு இந்தியாவின் பொழுதுபோக்கு தொழிலுக்குள் உள்ளடக்க தயாரிப்பு, மார்கெட்டிங் மற்றும் கார்பரெட் தலைமையின் வெவ்வேறு முகங்களில் பெண்களின் பயணம் குறித்த புள்ளி விவரங்களை மதிப்பிடுகிறது.
இந்த அறிக்கையின் பின்னணியில், இந்த துறையைச் சேர்ந்த வெவ்வேறு தலைவர்கள் அவர்களுடைய ஆதரவை தெரிவித்தனர் மற்றும் பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டர். திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் கூறினர், "எங்களுடைய செயல் திட்டங்களில் பன்முகத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு, எழுத்தாளர் அறைகளில் பெண்களை தொடர்ந்து சேர்ப்பதற்கு மற்றும் அரசாங்கம் கட்டாயமாக்கிய பிஓஎஸ்ஹெச் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுவதற்கு மற்றும் நிறுவனத்திற்குள் ஒரு ஐசிசி கொண்டிருப்பதற்கு நாங்கள் உறுதி மொழி எடுக்கிறோம்." அவருடைய ஆதரவிற்கான உறுதி அளிக்கையில், இயக்குனர் மற்றும் திரை எழுத்தாளரான சுதா கொங்காரா கூறினார்," என்னுடைய தயாரிப்பாளர்கள் அரசாங்கம் கட்டாயமாக்கியிருக்கும் பிஓஎஸ்ஹெச் வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை மற்றும் அவர்களுடைய இடத்தில் ஒரு ஐசிசி கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு நான் உறுதி மொழி ஏற்கிறேன்."
பெண்-முன்னணி வகித்த திரைப்படமான கங்குபாய் காத்தியாவாடிக்காக சமீபத்தில் தேசிய திரைப்பட விருதை வென்ற மற்றும் மற்றொரு பெண்களை -முன்னே வைக்கும் கதை அமைப்பான டார்லிங்குடன் தயாரிப்பாளர் ஆகவும் மாறியிருக்கும் ஆலியா பட் கூறினார், "என்னுடைய தயாரிப்பு திட்டங்களில் பன்முகத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன். அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் மற்றும் எக்சிக்யூட்டிவ் டைரக்டர் சுப்ரியா யார்லாகாட்டா கூறினார், "தெலுங்கு திரைப்பட துறையில் ஒரு ஐசிசி-ஐ நிறுவிய முதல் ஸ்டூடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் அன்னபூர்ணா ஆகும். எங்களுடைய தயாரிப்புகளில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கு மற்றும் எழுத்தாளர் அறைகளில் பெண்களை சேர்ப்பதற்கான எங்களுடைய முயற்சியை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். எங்களுடைய சூழல், பணியிடத்தில் அதிகமான பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறது". அபர்ணா புரோஹித், ஒரிஜினல்ஸ் தலைவர், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா , ப்ரைம் வீடியோ, உறுதி எடுத்துக் கொண்டார், "எழுத்தாளர் அறையில் பெண்களை சேர்ப்பதற்கு மற்றும் எங்களுடைய தயாரிப்புகள் அனைத்திலும் துறைத் தலைவர்களாக குறைந்தபட்சம் 30% பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நோக்கி பணியாற்றுவதற்கு நான் உறுதி அளிக்கிறேன் ."
அனைத்து உறுதி மொழிகளையும் இங்கே பார்க்கலாம்: https://drive.google.com/drive/folders/1l9S6ENy3KWnZcxfRuyuBmmaEEiG1zbPQ
2021 -லிருந்து இந்த தொழில் பார்த்திருக்கும் மாற்றம் குறித்த முழுமையான ஒரு கண்ணோட்டத்தை அடைவதற்கு, இந்த வருடம், 2022 ல் 8 இந்திய மொழிகளில் (ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி மற்றும் குஜராத்தி) ஸ்ட்ரீம் செய்யப்பட்ட மற்றும் தியேட்டரில் வெளியிடப்பட்ட 156 திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்த அறிக்கை ஆய்வு செய்தது,

ப்ரைம் வீடியோவுடன், க்ளீன் ஸ்லேட் ஃபில்ம்ஸ், எம்மே என்டர்டெய்ன்மென்ட், எக்செல் என்டர்டெய்ன்மென்ட், ஜியோ ஸ்டூடியோ, ப்ரொட்யூசர்ஸ் கில்டு இண்டியா, ஆர்எஸ்விபி , சோனிலைவ், டைகர் பேபி மற்றும் ஸீ5 உட்பட இந்த தொழிலைச் சேர்ந்த மற்ற பார்ட்னர்களால் இந்த அறிக்கைக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது .


Click it and Unblock the Notifications











