twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு வழியா 4 மிருகங்களையும் தூக்குல போட்டாச்சு..நிர்பயா தீர்ப்பு குறித்து பிரபலங்கள் ரியாக்ஷன்!

    |

    சென்னை: நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டை நிறைவேற்றப்பட்டது குறித்து திரை பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தொடர்ந்து அரசு தரப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சையளிக்கப்பட்டும் நிர்பயா உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் ஒருவர் சிறார் என விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    3 முறை தள்ளி வைப்பு

    3 முறை தள்ளி வைப்பு

    அந்த தீர்ப்பை டெல்லி ஹைகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் மீண்டும் உறுதி செய்தன. மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்தனர். இதனால் குற்றவாளிகளை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.

    நிராகரிப்பு

    நிராகரிப்பு

    குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதியன்று, குற்றவாளிகள் 4 பேரையும் 20ஆம் தேதியான அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு புதிய மரண வாரண்டை பிறப்பித்தார்.

    விடிய விடிய விவாதம்

    விடிய விடிய விவாதம்

    இந்த மரண வாரண்டு பிறப்பிக்கப்பட்ட பிறகும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, 4 பேர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு குற்றவாளி பவன் குப்தா சார்பாக அளிக்கப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    நிறைவேற்றம்

    நிறைவேற்றம்

    இதனை தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு அவர்கள் நான்கு பேரும் தனித்தனியாக தூக்கிலிடப்பட்டனர். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிலையில் 4 பேர் தூக்கிலிடப்பட்டது குறித்து தமிழ் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    4 மிருகங்களும்..

    நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவிட்டில், கடைசியாக நான்கு மிருகங்களும் தூக்கிலிடப்பட்டுள்ளது. ஒரு மிருகம் சிறார் என்ற ஓட்டை வழியாக தப்பித்து விட்டது. அவனுக்கு கொரோனா வைரஸால் தாக்கப்படுவான் அல்லது பேருந்தில் சிக்கி உயிரிழப்பான் என பதிவிட்டுள்ளார்.

    மட்டமான உயிர்கள்

    இதேபோல் நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
    உலக மகிழ்ச்சி தினமின்று! 30 நிமிடங்கழித்து உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு.ஆனால் 7 நீண்ட வருடங்கழித்தே மட்டமான சில உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது! என்று தெரிவித்துள்ளார்.

    செலிபிரேஷன் டைம்

    செலிபிரேஷன் டைம்

    திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி #NirbhayaVerdict என்ற ஹேஷ்டேக்குடன் செலிபிரேஷன் டைம் என பதிவிட்டுள்ளார். #NirbhayaJustice, #NirbhayaVerdict, #JusticeForNirbhaya, #NirbhayaCase, #nirbhayaconvicts, #RIPNirbhaya, #நிர்பயா, #TiharJail ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.

    English summary
    Celebrities talks about Nirbhaya verdict. Nirbhaya convicts in Nirbhaya case have been hanged.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X