twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மனிதாபிமானம் செத்து பலவருசம் ஆச்சு..' - சிரியா தாக்குதல் குறித்து பிரபலங்கள் ட்வீட்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    என்ன நடக்கிறது சிரியாவில் ? அழிக்கப்படும் அடுத்த தலைமுறைகள்- வீடியோ

    சென்னை : இந்தியாவில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் பற்றித்தான் பரபரப்பாக பேசப்படுகிறது. துபாய்க்குச் சென்றிருந்த ஶ்ரீதேவி குளியலறையில் பாத் டப்பில் மூழ்கி இறந்துள்ளதாக தடயவியல் அறிக்கை வெளியாகியுள்ளது.

    இதே நேரத்தில் நம் அனைவரையும் பாதித்த இன்னொரு விஷயம் சிரியா நாட்டில் நடைபெற்றுவரும் போர். சிரியா நாட்டு நாட்டு குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தை யாராலும் ஏற்க முடியவில்லை.

    ரசாயண குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த சிறு குழந்தைகளின் புகைப்படங்களை பார்க்கும் போது சில பிரபலங்கள் அழவே தோன்றுகின்றது என கூறிவருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து பிரபலங்கள் என்று கூறியிருக்கும் கருத்துகள் இங்கே...

    மெட்ரோ சிரிஷ்

    இவ்வளவு கொடூரமான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. மீடியா கவரேஜ் எங்கே? அரசுகள் என்ன செய்கின்றன? அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் இந்த கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

    திவ்யதர்ஷினி

    ஒரு பக்கம் மது, இன்னொரு பக்கம் விழுப்புரம் ஆராயி, அவரது எட்டு வயது மகன்.. உலகத்தின் இன்னொரு பக்கம் சிரியா சம்பவம்.. இது இன்னும் தொடர்கிறது. தலாய்லாமா சொல்வதைப் போல மன ஆரோக்கியத்தில் செயல்பட வேன்டிய நேரம். குழந்தைகள் வாழ தகுதியான இடமாக இந்த உலகம் மாற வேண்டும்.

    ஜி.வி.பிரகாஷ்

    இவர்களோடு சேர்த்து மனிதாபிமானமும் இறந்து போனது. #SaveSyria #SaveSyrianChildren

    மனிதாபிமானம் இருக்கா?

    இங்கே மனிதாபிமானம்னு ஒண்ணு இருக்கா... நிஜமாகவே, சிரியாவில் என்ன நடக்குதுன்னு என்னால் நம்பமுடியவில்லை. #SyriaInBleeding #SaveSyrianChildren

    மனிதம் செத்துப்போச்சு

    மனிதாபிமானமா? LOL அது எப்பவோ செத்துப்போச்சு. #Syria #PrayForSyria #Villupuram

    English summary
    Syria war pictures are heart broking. Some celebrities are crying when we see photos of small children who have suffered from the chemical blast.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X