ஆஸ்கர் விருது விழா.. சினிமா பிரபலங்கள் போட்ட சுவாரஸ்ய ட்வீட்கள்.. உலகளவில் டிரெண்டான ஹாஷ்டேக்!
Recommended Video
சென்னை: 92வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
கொரிய திரைப்படமான பாராசைட் படம் அதிகபட்சமாக 4 விருதுகளை தட்டிச் சென்றது.
1917 திரைப்படம் மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது. ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், மேரேஜ் ஸ்டோரி, ஜோக்கர், ஜோஜோ ராபிட், ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி உள்ளிட்ட பல படங்கள் ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றின.
சுமார் 2.3 மில்லியன் ட்வீட்களுடன் # Oscars காலை முதலே டிரெண்டாகி வருகிறது. ஹாலிவுட் பிரபலங்கள் முதல் நம்ம ஊர் பிரபலங்கள் வரை ஆஸ்கர் குறித்து என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்.
சுனைனா ட்வீட்
ஆஸ்கர் விருது விழா தொடங்கியதில் இருந்தே நடிகை சுனைனா ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாகவும் ஆர்வத்துடனும் இருந்தார். பாராசைட் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது அறிவிக்கப்பட்ட போது அதனை பகிர்ந்த சுனைனா புதிய வரலாறு உருவாக்கப்பட்டது என ட்வீட் போட்டுள்ளார். முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி திரைப்படத்திற்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
பிரியங்கா சோப்ரா
ஆஸ்கர் விருது விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என நடிகை பிரியங்கா சோப்ரா ட்வீட் போட்டிருந்த நிலையில், ஆஸ்கர் விருது விழாவில் 4 விருதுகளை அள்ளிய பாராசைட் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்த வருட ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியில் உங்களின் கவர்ச்சியை மிஸ் பண்ணிட்டோம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
குட்டி ஜானு
96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கெளரி கிஷன், தற்போது மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்குயின் பீனிக்ஸ் வென்றுள்ள நிலையில், ஆஸ்கர் விருது விழா மேடையில் அவர் உருக்கமாக பேசிய வீடியோவை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீனிவாஸ் மோகன்
ஷங்கரின், ஐ, 2.0 உள்ளிட்ட படங்களுக்கு கிராஃபிக்ஸ் இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன், ஆஸ்கர் அகாடமி குழுவின் மெம்பராக உள்ளார். இன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் பிரம்மாண்ட ஆஸ்கர் சிலை அருகே எடுத்த தனது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
கனா இயக்குநர்
காமெடி நடிகராகவும், நெருப்புடா பாடலை பாடி கம்பீர பாடகராகவும் கனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர் வரிசையில் இடம் பெற்ற அருண் ராஜா காமராஜ், ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ஜோக்குயின் பீனிக்ஸ் குறித்து அகாடமி போட்ட ட்வீட்டை லைக் செய்து ரீட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











