For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  2019ல் அதிகம் விமர்சிக்கப்பட்ட.. சர்ச்சைக்குள்ளான பிரபலங்கள்.. யாருன்னு பாருங்க.. இதோ டாப் லிஸ்ட்!

  |

  சென்னை: 2019ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டில் அதிகம் விமர்சனத்துக்கு ஆளான பிரபலங்கள் யார் என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பு!

  2019 ஆண்டு தமிழ் சினிமா பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்தது. அதேபோல் கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்றது.

  பல பிரபலங்கள் அடிக்கடி தலைப்புச் செய்தியாயினர். பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டனர்.

  உலகின் அழகான விஷயம் என்னன்னா... முன்னாள் ஹீரோயின் கர்ப்பத்துடன் செம போஸ்.. வைரலாகும் புகைப்படம்உலகின் அழகான விஷயம் என்னன்னா... முன்னாள் ஹீரோயின் கர்ப்பத்துடன் செம போஸ்.. வைரலாகும் புகைப்படம்

  அதிகம் பேசப்பட்டவர்கள்

  அதிகம் பேசப்பட்டவர்கள்

  அந்த வகையில் யார் யார் என்ன காரணத்துக்காக விமர்சிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவலைதான் இங்கு செய்தியாக பார்க்கப்போகிறோம். அதிகம் விமர்சிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர், நடிகை மீரா மிதுன்.

  மீரா மிதுன்

  மீரா மிதுன்

  மாடலான மீரா மிதுன் பேஷன் ஷோ நடத்துவதாக கூறி பல பெண்களிடம் மோசடி செய்ததாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கேயும் சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இயக்குநர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாக கூறி சர்ச்சையைக்கிளப்பினார். தொடர்ந்து, தொழிலதிபர் ஜான் மைக்கேல் மீது கொலை முயற்சி ஆடியோ, சேரன் குறித்த ஆடியோ, முகேன் குறித்த ஆடியோ என தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளான மீரா மிதுன், பப்களில் ஆண்களுடன் ஆபாச ஆட்டம், கவர்ச்சி போட்டோ தற்போதும் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

  வனிதா

  வனிதா

  அடுத்து அதிகம் விமர்சனத்துக்கு ஆளானவர் வனிதா விஜயக்குமார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த வனிதா, சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் அடிக்கடி செய்திகளில் சிக்கிய வனிதா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பங்கேற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே கொளுத்திபோடுவது, பற்ற வைப்பது என பல வேலைகளை செய்ததால் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி நெட்டிசன்களால் கழுவி ஊற்றப்பட்டார்.

  லாஸ்லியா

  லாஸ்லியா

  இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். சேரனை சேரப்பா என்றழைத்த அவர், பின்னர் கவினை காதலித்து சேரனைவிட்டு விலகினார். அவரது தந்தை பாசத்தையும் உதாசினப்படுத்தினார். சேரனை விட்டுவிலகியது மற்றும் கவினை காதலித்ததால் பெரும் பிரபலமானார். கவினிடம் பிறந்தநாள் கொண்டாடியதே இல்லை என பொய் சொன்னது, சேரன் குறித்து கவின் தவறாக பேசியதை ரசித்தது போன்ற காரணங்களால் அதிகம் கழுவி ஊற்றப்பட்டார்.

  யாஷிகா ஆனந்த்

  யாஷிகா ஆனந்த்

  நடிகை யாஷிகா ஆனந்த், இந்த ஆண்டு அதிகம் விமர்சிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். அடிக்கடி அரைகுறை ஆடையில் போட்டோ ஷுட்டுகளை நடத்தி கிறங்கடித்து வருகிறார். அவரது போட்டோக்கள் எல்லை மீறுவதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை திட்டித் தீர்த்தனர். மியா கலிஃபாவுடனும் அவரை ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும் யாஷிகா ஆனந்த் பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுபோன்ற போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

  ஷாலு ஷம்மு

  ஷாலு ஷம்மு

  நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால் படத்தில் நடித்ததை காட்டிலும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டதாலும் பப்பில் ஆண்களுடன் கெட்ட ஆட்டம் போட்டதாலும் அதிகம் விமர்சிக்கப்பட்டார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஷாலு ஷம்மு சமூக வலைதளங்களில் வாங்கிக்கட்டி வருகிறார்.

  ரம்யா பாண்டியன்

  ரம்யா பாண்டியன்

  ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்திற்கு பிறகு அதிக படங்களில் அவர் தலைக்காட்டவில்லை. ஆனால் சேலையில் கவர்ச்சிக்காட்டலாம் என்ற ட்ரென்ட்டை அறிமுகம் செய்தார். அவ்வப்போது இடுப்பு தெரிய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சொக்க வைத்து வருகிறார். ரம்யா பாண்டியனை தொடர்ந்து பல நடிகைகளும் கவர்ச்சியாக சேலை கட்டும் யுத்தியை பின்பற்றி வருகின்றனர். ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பை காணவே ஒரு கூட்டம் உள்ளது என்றளவுக்கு பிரபலமாகிவிட்டார் ரம்யா பாண்டியன். ஆனாலும் இவர் மாராப்பை முறையாக போடாமலும் தொப்புளை காட்டி சேலை உடுத்துவதும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

  சனம் ஷெட்டி

  சனம் ஷெட்டி

  சனம் ஷெட்டி மாடலான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் காதலி ஆவார். பிக்பாஸ் வீட்டில் தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் இடையிலான நெருக்கத்தை பார்த்து கதறல் வீடியோக்களை வெளியிட்டார். இனி தர்ஷனின் வாழ்க்கையில் தான் இல்லை, கடைசி வரை தர்ஷனை காதலித்துக்கொண்டுதான் இருப்பேன் என்று கூறி வீடியோக்களை வெளியிட்டார். மேலும் அவர்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்றதாக வனிதா கூறியதால் கடுப்பான சனம் ஷெட்டி அவருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

  சாக்ஷி அகர்வால்

  சாக்ஷி அகர்வால்

  பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு போட்டியாக பற்ற வைக்கும் வேலையை செய்தார். சில விஷயங்களை அரைகுறையாக கேட்டுவிட்டு இல்லாததையெல்லாம் சொல்லி ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே சண்டை மூட்டி விட்டார். கவினை காதலித்ததிலும் இரண்டு நிலைப்பாட்டில் இருந்தார். பின்னர் ஷெரினுக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து மக்களை நாய் என திட்டினார் சாக்ஷி அகர்வால் அதற்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். கவின் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வரும் சாக்ஷி தொடர்ந்து படங்களில் கமிட்டாகி, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

  மதுமிதா

  மதுமிதா

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, மக்களின் ஆதரவை பெற்றிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல் பிறர் குறித்து புறணி பேசாமல் நேர்மையாக விளையாடி வந்தார். இதனால் வெற்றியாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மதுமிதா, வனிதா போட்ட தூபத்தால் வாயை திறந்து சக ஹவுஸ்மேட்ஸ்களின் கோபத்திற்கு ஆளானார். அவர்கள் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா நிகழ்ச்சியின் விதியை மீறியதாக வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து அவர் மீது விஜய் டிவி காவல்நிலையத்தில் புகார் அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மதுமிதா விஜய் டிவி மீது புகார் அளித்தார்.

  அபிராமி

  அபிராமி

  அடுத்து அபிராமி, விளம்பரப்படங்களில் நடித்து வந்த அபிராமி, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். வந்த முதல் நாளே சக போட்டியாளரான கவின் மீது தனக்கு க்ரஷ் ஏற்பட்டதாக கூறிய அபிராமி, அடுத்த சில நாட்களிலேயே கவினிடம் காதலை சொன்னார். ஆனால் அவர் ஏற்காததால் மற்றொரு போட்டியாளரான முகேனை காதலித்தார். ஆனால் முகெனும் அவரது காதலை ஏற்காமல் தோழி என்றே கூறினார். இருப்பினும் அவரை காதலித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறி தனது காதலில் உறுதியாக இருப்பதாக கூறினார். அப்போது மேலும் சில ஆண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானதால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார் அபிராமி.

  மகாலட்சுமி

  மகாலட்சுமி

  சீரியல் நடிகையான மகாலட்சுமியும் வருடத்தின் கடைசியில் பெரும் சர்ச்சைக்கு ஆளானார். திருமணமான சக சீரியல் நடிகரான ஈஸ்வரை அவர் திருமணம் செய்ய விரும்புவதாக ஈஸ்வரின் மனைவியான சீரியல் நடிகை ஜெயஸ்ரீ கூறிய குற்றச்சாட்டால் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார். மேலும் இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் மற்றும் இருவரும் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொண்ட சாட்டின் ஸ்க்ரின் ஷார்ட்டுகள் வெளியானதால் அதிகம் பேசப்பட்டார்.

  English summary
  Celebrities who trolled and criticized much in 2019.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X