Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
குஷ்பு முதல் மோகன்லால் வரை... இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்
சென்னை : இந்திய சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளராக விளங்குகிறார் இளையராஜா. தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 1000 க்கும் அதிகமான படங்களில் இசையமைத்து பல சாதனைகளை படைத்துள்ளார்.
அவரின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு கெளரவ மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்து கெளரவித்துள்ளது. இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இளையராஜா தற்போது தமிழரசன், விடுதலை உள்ளிட்ட பல படங்களுக்கும், வெப் சீரிஸ் போன்றவற்றிற்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து குறி வருகின்றனர். இளையராஜாவை வாழ்த்திய பிரபலங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
பண்ணைபுரத்து ராசய்யா ராஜ்ய சபா உறுப்பினர்..இளையராஜா எனும் ஆளுமைக்கு கிடைத்த கவுரவம்..மகிழும் தமிழகம்

குஷ்பு
எங்கள் மாஸ்ட்ரோ இளையராஜாவிற்கு பிரதமர் மோடி அங்கீகாரம் அளித்துள்ளார். அவர்களின் கடின உழைப்பு மற்றும் திறமைக்கான பாராட்டுக்கு தகுதியானவர்களை அவர் எப்போதும் பாராட்டியுள்ளார். அன்புள்ள பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றி. தமிழ் மீதான உங்கள் அன்பு உலகம் பார்க்க வேண்டும்.

மோகன்லால்
ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட நமது மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் விளையாட்டின் பெருமையான பிடி உஷா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ரஜினிகாந்த்
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்

கமல்ஹாசன்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.

பாரதிராஜா
மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமக்கிப்படள்ள என் உயிர் தோழனுக்கு வாழ்த்துக்கள்.