உங்கள் அகம் நினைக்கும் மாற்றங்களை இவ்வையகமும் பெறட்டும்.. கமல் பிறந்தநாளில் பிரபலங்கள் வாழ்த்து மழை!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது 6 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் கமல். இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உலக நாயகனாக கோலோச்சி வருகிறார் கமல். மேலும் நடிகர் கமல்ஹாசன் 3 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ, செவாலியர் விருது என ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.

காமன் டிபி

காமன் டிபி

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கமலின் பிறந்த நாளை ஒரு வாரம் முன்பாகவே அவரது ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். மேலும் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் காமன் டிபியும் வெளியிட்டனர். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், கமல் சார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.. இந்த சினிமாவிற்கு உங்களின் பங்களிப்பு மகத்தானது.. அது தொடரட்டும்... உங்கள் அகம் நினைக்கும் மாற்றங்களை இவ்வையகமும் பெறட்டும்...என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் உதயா

நடிகர் உதயா

இதேபோல் நடிகர் உதயா பதிவிட்டுள்ள டிவிட்டில் எங்களின் என்றென்றும் உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சார் லவ் யூ ஆல்வேஸ் சார்.. தலைவர் என பதிவிட்டுள்ளார்.

நடிகை வனிதா

நடிகை வனிதா

இதேபோல் நடிகை வனிதா விஜயக்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், நீங்கள் இந்த நாற்காலியை மகிமைப்படுத்தும் ஒரு நபர். உங்கள் சாலை பயணங்களிலும் பிரச்சாரங்களிலும் நல்ல ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் நான் நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் உங்களை ஏராளமாக ஆசீர்வதித்துள்ளார், உங்கள் அரசியல் பயணத்தில் அவர் உங்களை மீண்டும் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்.. பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் சார் என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ராம்குமார்

இயக்குநர் ராம்குமார்

முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநரான ராம்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழ் சினிமாவில் மாஸ்டர் பீஸ்களை கொடுக்கும் பர்ஃபெக்ஷனிஸ்ட் கமல் சாருக்கு பிறந்த வாழ்த்துகள்... என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரமேஷ் அரவிந்த்

நடிகர் ரமேஷ் அரவிந்த்

நடிகரும் நடிகர் கமல்ஹாசனின் நண்பருமான ரமேஷ் அர்விந்தும் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கமல்ஹாசனுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் எப்போதும் கிடைக்க வேண்டும், அவரிடமிருந்து நித்தியமான படங்களை எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

ஒத்துழைத்ததில் மகிழ்ச்சி

ஒத்துழைத்ததில் மகிழ்ச்சி

ரமேஷ் அர்விந்த் பதிவிட்டுள்ள மற்றொரு டிவிட்டில்,ஒரு கலைஞர், ஒரு ஐகான், அந்த வார்த்தைகளின் முழுமையான அர்த்தமான நடிகர் கமல்ஹாசனுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருடன் பலமுறை ஒத்துழைத்ததில் மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X