ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது.. 100% பொருத்தம்.. திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… மத்திய அரசு அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதிலும் படங்களில் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அனிருத்

அனிருத்

இசையமைப்பாளரும் ரஜினியின் உறவினருமான அனிருத் தாதா சாகேப் விருது பெற்றுள்ள ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படையப்பா படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியின் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்வீட்டில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என குறிப்பிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

நடிகரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில், தலைவர் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரை புகழ்ந்து பேச எனக்கு வயதில்லை. அவருடைய மேன்மை எப்போதும் இருக்கும்.. குருவே சரணம் என பதிவிட்டுள்ளார்.

தேசிங்கு பெரியசாமி

தேசிங்கு பெரியசாமி

இதேபோல் ரஜினியின் ரசிகரும் இயக்குநருமான தேசிங்கு பெரியசாமியும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு தலைவா... என குறிப்பிட்டு பாபா சிம்பலுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

இதேபோல் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ள ட்வீட்டில்
தாதா சாகேப் பால்கே விருதுபெறும் ரஜினிக்கு என் வாழ்த்துக்கள்.
இந்த விருது
அவரது கலைப்பயணத்தின்
முற்றுப்புள்ளி என்று கருதிவிடமுடியாது.
அடுத்த சிகரம் அடைவதற்கான
ஆக்சிஜன் என்று கருத வேண்டும்;
அவர் கருதுவார்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X