விஜய் பிறந்தநாள்.. விஐபிகள் வாழ்த்து மழை.. யாரெல்லாம் சொன்னாங்க தெரியுமா #happybirthdayTHALAPATHY

சென்னை: நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது 10 வயதில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய்.

இதுவரை 62 படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடனக் கலைஞரான விஜய் ஏராளமான சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.

வெளிநாடுகளில் ரசிகர்கள்

வெளிநாடுகளில் ரசிகர்கள்

உலகில் ஐந்து கண்டங்களில் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பல்வேறு நாடுகளிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன.

பிரேக் கொடுத்த பூவே உனக்காக

பிரேக் கொடுத்த பூவே உனக்காக

நடிகர் விஜய் இதுவரை 62 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் படத்தில் மட்டுமே நடித்து வந்த விஜய்க்கு விக்ரமண் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக பெரும் பிரேக்காக அமைந்தது.

திரைத்துறையிலும் ஃபேன்ஸ்

திரைத்துறையிலும் ஃபேன்ஸ்

அந்தப் படத்தின் மூலம் விஜய் ஒரு நல்ல கதாநாயகன், நடிகன் என மக்களால் அங்கீகரிக்கப்பட்டார். திரைத்துறையிலும் நடிகர் விஜய்க்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

தற்போதும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பல நடிகைகள் விஜயுடன் ஒரு படத்திலாவது நடித்த விட வேண்டும் என நேர்காணல்களில் கூறுவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு திரை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நடிகர் விவேக் வாழ்த்து

நடிகர் விவேக் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் பிகிலை தொடங்குங்கள்.. பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரா என கூறியுள்ளார்.

பார்த்திபன் வாழ்த்து

இதேபோல் நடிகர் பார்த்திபனும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் 49 நிமிடங்களில்... பிகில்' போல் வாழ்த்துக்கு நன்றி என் Whatsapp-ல் விஜயமானது! பல்லாயிரம் கோடி ரசிகர்களின் பிகில்கள் அலைகளாய் எழும்பினாலும்,அமைதியான கடல் போல் ஆரவாரம் இல்லாதMr விஜய் வணிகத்தின் உச்சத்தை என்றும் தொடுவார்+தொடர்வார்! என பதிவிட்டுள்ளார்.

சாந்தனு வாழ்த்து

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் பிறந்த நாள் வாழ்த்துகள் என் டியரஸ்ட் விஜய் அண்ணா.. யாரும் தொடாத மைல் கல்லை வேற லெவலில் நீங்கள் தொட்டு சாதனை படைக்க வேண்டும்.. இப்போது இருப்பது போலவே எப்போதும் இருங்கள்.. என தெரிவித்துள்ளார்.

சதீஷ் வாழ்த்து

இதேபோல் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் பிறந்த நாள் வாழ்த்துகள் ரெக்கார்டு மேக்கர் அன்ட் ரெக்கார்டு பிரேக்கர் விஜய் சார்.. ஹேவ் ய கிரேட் இயர் என தெரிவித்துள்ளார்.

எஸ்ஜே சூர்யா வாழ்த்து

இயக்குநரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார்.. டெட்ரா டெரா மாஸா...வாழ்துக்கள் இயக்குநர் அட்லி சார் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் படக்குழு என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X